ஏடிஎம் மெஷின்களில் ரயில் டிக்கெட்!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
வங்கிகளின் ஏடிஎம் மெஷின்கள் மூலம் ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய ரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது.
ரயில்வேயின் சார்பில் முதல் கால் சென்டர் பெங்களூரில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு ரயில்வே குறித்த அனைத்துகேள்விகள், விசாரணைகளுக்கும் இந்த கால் சென்டர் 24 மணி நேரமும் பதில் தரும்.இந் நிலையில் வங்கிகளின் ஏடிஎம் மெஷின்களில் கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரயில் டிக்கெட்டுகளை வாங்கும்முறையை அமல்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக தென் மேற்கு ரயில்வேயின் தலைமை பொறியாளர் மோட்கில்தெரிவித்துள்ளார்.
சில மாதங்களில் பரிட்சார்த்தரீதியில் இந்தத் திட்டம் செயல்பாட்டு வரும். இது தொடர்பாக பல்வேறு வங்கிகளுடன் ரயில்வேபேசி வருகிறது.
மேலும் ரயில்களின் நேரம் குறித்து செல்போன்களில் தகவல் பெறும் தொழில்நுட்பத்தை அமல்படுத்தவும் யோசிக்கப்பட்டுவருகிறது.












Click it and Unblock the Notifications