கடலூர்: மீட்புப் பணியில் கடற்படை
கடலூர்:
![]() |
வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு கடற்படை ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள்போடப்பட்டு வருகின்றன.
பயங்கர மழை காரணமாக வீராணம் ஏரி உடையும் நிலையில் உள்ளது. அதிலிருந்தும் சுற்றியுள்ள ஏரிகள், குளங்களில் இருந்துவெளியேறிய நீர் சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், ஓரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 300கிராமங்களைச் சூழ்ந்துவிட்டது.
இதனால் இந்தப் பகுதி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்களில்முக்கால்வாசி மூழ்கும் அளவுக்கு நீர் மட்டம் உள்ளதால் இப் பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற முடியவில்லை.
நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. நீரின் ஓட்டம் மிக வேகமாக இருப்பதால் சிறியபடகுகள் உதவியால் மீட்கவும் முடியவில்லை. அப் பகுதியில் வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கச் சென்றஅதிகாரிகள் உள்ளிட்டவர்களும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
பலர் வீட்டு மொட்டை மாடிகளிலும், மரங்களிலும் ஏறி அமர்ந்துள்ளனர். இந்தப் பகுதி மக்களை ஹெலிகாப்டர்கள் அல்லதுகடற்படைக் கப்பல்களால் தான் காப்பாற்ற முடியும் என கடலூர் மாவட்ட நிர்வாகம் தகவல் அனுப்பியுள்ளது.
இதையடுத்து கடலூருக்கு சென்னையில் இருந்து விக்ரம் என்ற கப்பல் விரைந்தது. அது இன்று காலை பரங்கிப் பேட்டை வந்துசேர்ந்தது. சுமார் 125 வீரர்களுடன் வந்துள்ள இந்தக் கப்பல், மக்களை விரைவுப் படகுகளைக் கொண்டு வெளியேற்றி வருகிறது.மேலும் ராமநாதபுரத்தில் இருந்து கடலோரக் காவல் படையின் கப்பல் ஒன்றும் கடலூர் விரைந்துள்ளது.
இது தவிர கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் சூழப்பட்ட கிராமங்களில் உணவுப் பொட்டலங்கள்போடப்பட்டு வருகின்றன.
இம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் மக்கள் 100 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே நேற்றிரவு கடலூர் மாவட்டத்தில் வெள்ள நிலையைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் சண்முகம், மாவட்டகலெக்டர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரையும் வெள்ளம் சூழ்ந்தது. சேத்தியாதோப்பு பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய இவர்களைபடகுகளால் மீட்க முடியவில்லை.
இதனால் விடிய விடிய அவர்கள் கார்களிலேயே அமர்ந்திருந்தனர். இன்று அவர்களை மீட்க தமிழ்நாடு வடக்கு மண்டல ஐஜிஜாங்கிட் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகள் விசைப் படகுகளுடன் விரைந்துள்ளனர்.
இதற்கிடையே வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளவையும் தாண்டிவிட்டது நீர் மட்டம். இதனால் ஏரி எந்த நேரத்திலும்உடையும் நிலையில் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications