சுற்றுலாவில் மாணவிகளிடம் சில்மிஷம்: 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
திருவண்ணாமலை:
ஊட்டிக்கு சுற்றுலா அழைத்து சென்ற போது மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் உள்பட 7 ஆசிரியர்கள்சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவிகள் 46 பேர் கடந்த 18ம்தேதி இரவு ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டு சென்றனர்.இவர்களுடன் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், உதவி தலைமை ஆசிரியர் கோவிந்த சாமி மற்றும் ஆசிரியர்கள் ஏழுமலை,சிவகுமார், சேகர், குமார் மற்றும் ஆசிரியை பரிமளா ஆகியோரும் சென்றனர்.
கோவையில் இருந்து குன்னூர் நோக்கி சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்த போது வழியில் பஸ்சை நிறுத்தி தலைமை ஆசிரியர்ராஜேந்திரன், மற்றும் 6 ஆசிரியர்களும் மது அருந்தி உள்ளனர். பின்னர் பஸ்சில் ஏறி குடிபோதையில் ஆபாசமாக பேசி கலாட்டாசெய்து உள்ளனர். நடிகர் விஜய் நடித்த சிவகாசி பாடலை ஒலிபரப்பி நடனமாடியுள்ளனர்.
அப்போது மாணவிகளை தொட்டு சில்மிஷம் செய்தனர். இதனால் மாணவிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். சுற்றுலா முடிந்துஊருக்கு திரும்பிய மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இச்சம்பவம் குறித்து தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் உடனடியாக பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், மற்றும் முதன்மைஅதிகாரியிடம் புகார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து முதன்மை கல்வி அதிகாரி பாலமுருகன் இப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போதுமாணவிகளின் பெற்றோர்கள், தலைமை ஆசிரியர் உள்பட 7 ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றுவற்புறுத்தினார்கள்.
இது பற்றி துறை வாரி நடவடிக்கை எடுக்க கல்வித்துறை இயக்குனர் மற்றும் இணை இயக்குனரை முதன்மை கல்வி அதிகாரிநேரில் சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவினை பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிறப்பித்துள்ளார் என்று அதிகாரி பாலமுருகன் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications