இந்திய வீரர்களை நோகடித்த கொல்கத்தா ரசிகர்கள்
கொல்கத்தா:
இந்திய-தென்னாப்பிரிக்கா இடையே கொல்கத்தாவில் நேற்று நடந்த 4வது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான முறையில்தோல்வி அடைந்தது.
கொல்கத்தா வீரரான கங்குலி அணியில் இடம் பெறாததால் உள்ளூர் ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். அவர்கள் போட்டிதொடங்கியதிலிருந்தே இந்திய வீரர்களை பார்த்து கேலி செய்து கொண்டிருந்தனர். இத தான் இந்திய அணியின் மோசமானதோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.ரசிகர்கள் கங்குலிக்கு ஆதரவாகவும் கேப்டன் ராகுல் திராவிட்டுக்கு எதிராகவும் கோஷம் போட்டனர். பயிற்சியாளர் கிரேக்சேப்பலை எதிர்த்து மோசமாக வார்த்தைகளால் திட்டினர். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய வீரர்கள் ஒருவிதபதட்டத்துடன் காணப்பட்டனர்.
கங்குலி இல்லையேல் கிரிக்கெட் இல்லை என்று இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான காம்பீரும், பதானும் மைதானத்தில்இறங்கிய போது கோஷமிட்டனர். இதனால் தொடக்க ஆட்டக்காரர் பதான் முதல் ஓவரிலேயே அவுட் ஆனார். அப்போதுரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மீண்டும் சேப்பலை வெளியேற்று, இந்தியாவை காப்பாற்று என்று கோஷமிட்டனர்.
தெண்டுல்கர் வந்த போது தெண்டுல்கர் ஏய் ஏய் என்று கேலி செய்தனர். இதனால் அவரும் 2 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.அப்போது இன்னும் கேலி அதிகரித்தது. இதனால் இந்திய வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டனர். ஷேவாக் 30 ரன்னில்அவுட்டான போது கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ராகுல் திராவிட் மைதானத்திற்கு வந்ததில் இருந்தே அருக்கு எதிரான கோஷங்கள் விண்ணை பிளந்தன. அவர் 6 ரன்னில் அவுட்ஆகி பெவிலியன் திரும்பிய போது அவமானம் அவமானம் டிராவிட் ஒழிக என்று கோஷமிட்டார்கள்.
கங்குலிதான் ஹீரோ சேப்பல் முட்டாள் என்று எழுதப்பட்ட அட்டையை தூக்கி பிடித்தனர். இப்படி ரசிகர்களின் கேலிதொடர்ந்ததால் இந்திய வீரர்கள் நிலைத்து நிற்க முடியாமல் விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினர்.
நான் 10 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுகிறேன். இதே ரசிகர்கள் நம்மை பாராட்டவும் செய்கிறார்கள். கேலியும்செய்கிறார்கள். நான் மட்டும் அல்ல பல கேப்படன்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது என்று கேப்டன் திராவிட்கூறினார்.
கொல்கத்தா ரசிகர்களின் எதிர்ப்பு கங்குலியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதை அவர் விரும்பவில்லை தனது எதிர்காலம்இதனால் பாதிக்கப்படுமோ என்று அச்சத்தில் அவர் உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications