குண்டும்,குழியுமான சென்னை நெடுஞ்சாலைகள்
சென்னை:
மதுரவாயல்-கோயம்பேடு சாலை மழையால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் நீண்ட கியூவில்ஊர்ந்து செல்கின்றன.
சென்னையில் உள்ள முக்கியமான சாலை பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகும். காஞ்சிபுரம், பெங்களூர், மும்பை, ஹைதராபாத்,ஆகிய பகுதிகளில் இருந்து வரும் லாரி-பஸ் மற்றும் வாகனங்கள் வேலப்பன்சாவடி வழியாக கோயம்பேடு செல்கின்றன. இதேபோல் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்ளில் இருந்து வரும் பஸ்-லாரிகளும் மதுரவாயல் வழியாக கோயம்பேடு செல்கின்றன.இதனால் 3 முக்கிய சாலைகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மதுரவாயல், கோயம்பேடு சாலையில் செல்லக்கூடியநிலை உள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சென்னையில் பல பகுதிகளில் உள்ள சாலைகள் பலத்த சேதம் அடைந்துள்ளன.இருந்தாலும் அதிக அளவில் மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரை உள்ள சாலை பழுதடைந்துள்ளன.
இந்த சாலைகள் எங்கு பார்த்தாலும் மரண பள்ளமாக காட்சி அளிக்கின்றன. மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரைவாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்கின்றன.
இதனால் 5 கீமீ தூரம் வரை உள்ள இந்த சாலையை கடக்க 45 நிமிடம் ஆகிறது. இதனால் இந்த வழியாக அலுவலகங்களுக்குசெல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சாலையை சீரமைக்க மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைஎடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications