வெள்ள சேதம்: ஜெ. நிவாரண உதவி வழங்கினார்
கடலூர்:
![]() |
வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின் திரும்பி வரும் வழியில் ஆங்காங்கே வேனை நிறுத்தி ரோட்டின் ஓரம் இருந்த மக்களிடம்குறைகளைக் கேட்டறிந்தார். மருவாய் கிராமத்தில் மாவட்ட அதிகாரிகளிடம் வெள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.
வடலூர் ஆர்ச் காலனி அருகே முதல்வர் வரும்போது அங்கு கூடியிருந்த பெண்களில் ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் சூட்டகூறினார். உடன் முதல்வர் குழந்தைக்கு பெயர் சூட்டினார். ஜெயலலிதா வருகையையொட்டி அண்ணா விளையாட்டு அரங்கத்தில்ஹெலிகாப்டர் இறக்கப்பட்டது.
இதற்கான ஒத்திகை பார்க்க காலை 10.45 மணிக்கு விளையாட்டு அரங்கில் ஹெலிகாப்டர் இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது.ஜெயலலிதா வருகைக்காக மழைநீர் தேங்கி இருந்த விளையாட்டு அரங்கம் அவசரம் அவசரமாக சீர் செய்யப்பட்டது. அங்கிருந்தமூன்று வேப்ப மரங்கள் வெட்டி எறியப்பட்டன.
![]() |
இதில் வைரங்குப்பத்தை சேர்ந்த 50 பேருக்கு முதல்வர் நிவாரண உதவி வழங்கினார். ஜெயலலிதா வருகையையொட்டி நிவாரணம்பெறும் மக்கள் மண்டபத்தில் அமர வைக்கப்பட்டனர். அழைத்து வரப்பட்டவர்களுக்கு இடம் போதாததால் மண்டபத்திற்குவெளியேயும் அமர வைக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவை வரவேற்க கட்சிக்காரர்கள் அதிகளவில் தங்கள் பங்களிப்பை வழங்கினர். நிவாரணம் பெற வந்த பெண்களில்,ஒருவரின் குழந்தை பசிக்காக அழுதபோது, குழந்தைக்கு பால் வாங்கி கொடுக்க வெளியே அனுப்பப்பட்டார்.ஒவ்வொரு பகுதியிலிருந்தும் நிவாரணத்திற்காக அழைத்து வரப்பட்ட பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் குறிப்பிட்ட பகுதியில்அமர வைக்கப்பட்டனர். நிவாரணப் பொருட்கள் மேடை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொருவருக்கும் ரூ. 2000 ரொக்கம், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை, ஒரு லிட்டர் மண்ணெண்ணைவழங்கப்பட்டது. இந்த நிவாரணம் வீடு முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.
இன்று திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை ஜெயலலிதா பார்வையிடுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications