மதுரை-விருதுநகர் 4 வழிச்சாலை பணிகள் துவங்கியது
மதுரை:
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்தில்லா வேகத்தை அதிகரிக்கவும் மதுரை - விருதுநகர் இடையே 48.8 கிமீதொலைவுக்கு ரூ.282.58 கோடி மதிப்பில் "4 வழிச்சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு மார்ச்சில் இந்த சாலை போக்குவரத்திற்கு திறக்கப்படுகிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை "7ல் மதுரை -விருதுநகர் பகுதி 48.8 கிமீ நீளம் கொண்டது. "தங்க நாற்கர திட்டத்தின் கீழ் இதை நான்கு வழிப்பாதையாக்கும் பணியை தேசியநெடுஞ்சாலை ஆணையம் துவக்கி உள்ளது.விபத்தில்லா வேகத்தை அதிகரிக்கவும், பயண நேரத்தை குறைக்கவும், நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும்இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக மதுரை சமயநல்லூர் - தோப்பூர் வரையிலும், தோப்பூர் - திருமங்கலம்கரிசல்பட்டி கண்மாய் வரையிலும், கரிசல்பட்டி கண்மாய் -விருதுநகர் வரையிலும் சாலை அமைக்கும் பணி 3 கட்டமாகதுவக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் ஆந்திராவை சேர்ந்த படேல், கே.என்.ஆர். ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 180 அடிஅகலத்துடன் சமயநல்லூர் வைகையாற்றில் நீளமான மேம்பாலம், 26 சிறிய பாலங்கள், 14 ஸ்லாப் குறும் பாலங்கள், 36 குழாய்குறும்பாலங்கள், 2 ரயில்வே மேம்பாலங்கள், சுற்றுச்சாலை சந்திப்பில் ஒரு பெரிய மேம்பாலம், அனைத்து வசதிகளுடன் கூடியவாகனங்கள் நிறுத்துமிடம் என அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டம் வரும் 2008ம் ஆண்டு மார்சுக்குள் முடிக்கப்பட்டு வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட வேண்டும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்தை அடிப்படையாக கொண்டு இப்பாதை அமைக்கப்படுவதால் விபத்துக்கள் குறையும். வாகனங்கள் பழுதாவதும்வெகுவாக குறையும், வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications