விஜயகாந்தின் தேர்தல் வியூகம்: புதிய கூட்டணி
சென்னை:
நடிகர் விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கி தீவிர அரசியலில் குதித்துள்ளார். இந்நிலையில் வருகிறதேர்தலில் அவர் 3வது அணியமைக்க திட்டமிட்டுள்ளார்.
தேமுதிக நிர்வாகிகள் பலர் கூட்டணி அமைப்பதே புத்திசாலித்தனம் என்று யோசனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகதலைமையில் 3வது அணி அமைக்க அவர் திட்டுமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறிய கட்சிகளை இந்த அணியில் சேர்க்க அவர்வியூகம் வகுத்துள்ளார்.புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் இயக்கங்களில் இருந்து பிரிந்தவர்கள் இந்த அணியில் சேருவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் இருந்து விலகி மக்கள் குடியரசு கட்சியை தொடங்கியுள்ள திருவள்ளுவன் தேமுதிகவுக்குஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். விஜயகாந்தை இது குறித்து சந்தித்து பேசியதாகவும் தெரிகிறது.
இதுபற்றி திருவள்ளுவன் கூறும்போது, தலித் இயக்கங்களை அதிமுக-திமுக மதிப்பது இல்லை. நாங்களாக ஆதரவு கொடுத்தாலும்சீட் தரமாட்டார்கள். அதனால் 3வது அணியில் சேர முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற அமைப்பு நடத்துபவர்களை விஜயகாந்த் அணியில் சேர்க்க முயற்சிகள் நடக்கிறது.
விஜயகாந்த் அடுத்த மாதம் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். அப்போது இந்த அமைப்புகளின்தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
விஜயகாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமைப்புகளின் பட்டியல் தயாராகி வருகிறது. முதல் கட்ட சுற்றுப்பயணம் முடிந்ததும்இதை விஜயகாந்த் வெளியிடுகிறார். இந்த அமைப்புகளுக்கு சில தொகுதிகளை விஜயகாந்த் ஒதுக்குவார் என்று கூறப்படுகிறது.
விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க பாஜக விருப்பம் தெரிவித்தது. ஆனால் விஜயகாந்திடம் இருந்து சாதகமான பதில்வராததால் அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் போது இது பற்றி பேச்சுவர்த்தை நடத்தலாம் என்றுகூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications