உத்தவ் Vs
மும்பை:
பாஜகவில் ஒரு பக்கம் கோஷ்டிப் பூசல் நடந்து வரும் நிலையில் சங் பரிவாரின் இன்னொரு அமைப்பான சிவ சேனை பிளவைநோக்கிப் போய்க் கொண்டுள்ளது.
கட்சியின் தலைவர் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேயை எதிர்த்து அவரது உறவினரான ராஜ் தாக்கரே போர்க் கொடிஉயர்த்தியுள்ளார்.கட்சியின் செயல் தலைவராக உள்ள உத்தவுக்கும், கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்த ராஜ் தாக்கரேவுக்கும்இடையே நீண்ட காலமாகவே பனிப் போர் நடந்து வந்தது. இவர்களில் பால் தாக்கரேவுக்கு அடுத்தபடியாக ராஜ் தாக்கரேவுக்கேகட்சியிலும் பொது மக்கள் மத்தியிலும் ஆதரவு உள்ளது.
பால் தாக்கரேவின் மகன் உத்தவுக்கு தொண்டர்களின் ஆதரவு சுத்தமாக இல்லை. ஏரியல் போட்டோகிராபி போன்ற ஹைடெக்ஹாபிகள் கொண்ட உத்தவுக்கு தொண்டர்களிடம் அவ்வளவாக ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.
ஏசி ரூம் அரசியல்வாதியான இவர் தான் இப்போது சிவசேனையின் செயல் தலைவராக உள்ளார். பால் தாக்கரே உடல் நலம்குன்றியிருப்பதால் கட்சியை இவர் தான் நடத்தி வருகிறார்.
ஆனால், பால் தாக்கரேவின் சகோதரி மகனான ராஜ் தாக்கரே கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவராக மிகத் தீவிரமாகசெயல்பட்டவர். கட்சியின் அனைத்து நிலையிலும் அவருக்கு அமோக ஆதரவு உள்ளது.
ஆனால், உத்தவ் தாக்கரேவால் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வந்த இவர் சமீபத்தில் நடந்த இரு இடைத் தேர்தல்களிலும்பிரச்சாரத்துக்குச் செல்லவில்லை. இவரது ஆதரவாளர்களும் களத்தில் இறங்கவில்லை.
இதனால் உத்தவ் தாக்கரே தான் பிரச்சாரப் பணிகளை கவனித்தார். ஆனால், கட்சி டெபாசிட் இழந்து கேவலமாகத் தோற்றது. பால்தாக்கரே செய்த பிரச்சாரம் கூட எடுபடாமல் போய்விட்டது.
இந்தத் தோல்வியால் ராஜ் தாக்கரேவின் பலம் வெளிப்பட்டது. பெரும்பாலான கட்சித் தொண்டர்கள் பால் தாக்கரேவைக் கூடவிட்டுவிட்டு ராஜ் தாக்கரேவுக்கு ஆதரவாகத் திரும்பிவிட்டது தெளிவானது.
இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் சிறிய பேரணி நடத்தினார் ராஜ். 15 கார் ஊர்வலத்துடன் அவர் தொடங்கிய பேரணி,மும்பையை நெருங்கியபோது நூற்றுக்கும் மேற்ட்ட கார்களாக பெருகின.
வீட்டை அடைந்த அவர், கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்து விலகுவதாக அறிவித்தார். உத்தவ் தாக்கரேவால் கட்சிநசிந்து வருவதாகப் பேசினார். அவரது பேச்சுக்கு மகாராஷ்டிரம் முழுவதும் ஆதரவு கிடைத்துள்ளது.
இந் நிலையில் ராஜ் தாக்கரேவுக்கு பதில் சொல்லாமல் இருந்த பால் தாக்கரே இன்று தனது கட்சி நாளேடான சாம்னாவில்எழுதியுள்ள தலையங்கத்தில் ராஜை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
கட்சியைவிட எந்தத் தனி நபரும் பெரியவர் அல்ல என்று பால் தாக்கரே கூறியுள்ளார். இதனால் ராஜ் விரைவில் கட்டம்கட்டப்பட்டு வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது.
மக்கள் ஆதரவு கொண்ட ராஜை இழுக்க காங்கிரஸ், சரத்பவார் உள்ளிட்டோர் தயாராக உள்ளனர். சிவசேனையில் பெரும்பாலானஎம்.பி, எம்எல்ஏக்களின் ஆதரவையும் கொண்ட ராஜ் விரைவில் கட்சியை உடைப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications