இலங்கை டெஸ்ட்: டிக்கெட் வாங்க ஆளில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மழை வருவது தெரிந்தும் எதற்காக கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டன என்று தமிழக கிரிக்கெட் கிளப்புக்குஉயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 22ம் தேதி இந்தியா-தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம்மைதானத்தில் நடக்க இருந்தது.

20,21,22ம் தேதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையிலும், தமிழகத்தில் இது மழைபெய்யும் மாதம் என்றபோதும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சென்னைப் போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம்அறிவித்தது.

இந்தப் போட்டிக்காக ரூ. 200 முதல் ரூ. 10,000 வரையிலான டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. சுமார் 45,000 பேர் டிக்கெட்வாங்கினர். காலை 7 மணிக்கே ஆயிரக்கணக்கானவர்கள் ஸ்டேடியத்துக்குள் வந்துவிட மாலை 3 மணி வரை போட்டிதொடங்கும், போட்டி நடக்கும் என்று டுபாக்கூர் விட்டபடியே இருந்தனர்.

கடைசியில் 3.30 மணிக்கு போட்டி நடக்காது என்று கூறி ரசிகர்களைத் திருப்பி அனுப்பினர்.

டிக்கெட்டுகளின் பின்னால், எக்காரணம் கொண்டும் டிக்கெட் வாபஸ் பெறப்படாது, பணம் திருப்பித் தரப்படாது என்றுஅச்சிட்டுவிட்டனர். இதனால் பணத்தைக் கேட்ட ரசிகர்களிடம் ரூல்ஸ் பேசினர் தமிழக கிரிக்கெட் கிளப் அமைப்பினர்.

இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மழைக் காலம்இருக்கும்போது போட்டிகளை அறிவிப்பது கிரிக்கெட் வாரியத்தின் வழக்கமாகிவிட்டது.

மேலும் இந்தமுறை புயல் சின்னம் இருந்த நிலையில் போட்டியை கடைசி நேரத்திலாவது ரத்து செய்திருக்கலாம். ஆனால்,டிக்கெட்டுகளை விற்க வேண்டும் என்பதற்காக போட்டியை ரத்து செய்யாமல் விட்டுவிட்டனர்.

இதை நம்பி ரசிகர்களும் டிக்கெட் வாங்கி ஏமாந்துவிட்டனர். இதன்மூலம் கோடிக்கணக்கில் பணம் வசூலாகியுள்ளது.

நிர்வாக செலவுகள் போக மீதிப் பணத்தை ரசிகர்களுக்கு திருப்பித் தர வேண்டும் என உத்தரவிட வேண்டும் என அந்த மனுக்களில்கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ஷா, நீதிபதி இப்ராகிம் கலீபுல்லா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய மனுதாரர்ரளின் வழக்கறிஞர்கள், மழை வரும் என்று எச்சரிக்கை விடப்பட்ட நிலையிலும் டிக்கெட்டைவிற்றுள்ளனர்.

கிரிக்கெட் சட்ட விதிகளின்படி 10 ஓவருக்குள் போட்டியை ரத்து செய்தால் வசூலித்த கட்டணம் முழுவதையும் திருப்பித் தரவேண்டும். 25 ஓவர் முடிவதற்குள் போட்டி ரத்து செய்யப்பட்டால் பாதிக் கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டும். ஆனால்,இந்தமுறை போட்டியே நடக்கவில்லை. எனவே கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்க உத்தரவிடுங்கள் என்றனர்.

இதையடுத்து கிரிக்கெட் சங்கத்தின் வழக்கறிஞரைப் பார்த்துப் பேசிய தலைமை நீதிபதி ஷா,

நீங்கள் டிக்கெட் பணத்தைத் திருப்பித் தரப் போகிறீர்களா? இல்லையா?. கிரிக்கெட் கிளப் போன்ற ஒரு மிகப் பெரிய அமைப்புஇப்படி நடந்து கொள்ளலாமா?. பணத்தைத் திருப்பித் தராவிட்டால் ரசிகர்கள் ஏமாற மாட்டார்களா?.

3 நாட்களாக மழை பெய்தது தெரியாதா? ஏன் டிக்கெட் விற்றீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த கிரிக்கெட் சங்கத்தின் வழக்கறிஞர் ராமன், இதில் பிரச்சனை டிக்கெட் மட்டுமல்ல. பல்வேறு பிரச்சனைகள்இருந்ததால் தான் போட்டியை ரத்து செய்ய முடியவில்லை.

கிரிக்கெட் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ. 3 கோடி வரை செலவு செய்கிறது. எங்கள் சங்கத்தைப் பொறுத்தவரைஇது போன்ற போட்டி நடத்தினால் மட்டுமே ஓரளவு வருவாய் ஈட்ட முடியும்.

மேலும் ஒரு போட்டியை ரத்து செய்தால் அடுத்து 21 போட்டிகளை எங்களுக்குத் (தமிழக கிரிக்கெட் கிளப்புக்கு) தர மாட்டார்கள்.இதனால் தான் அன்றைய போட்டியை ரத்து செய்ய முடியவில்லை என்றார்.

இதையடுத்துப் பேசிய நீதிபதி ஷா, இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. எனவே இது குறித்து விரிவான பதிலைகிரிக்கெட் கிளப் அளிக்க வேண்டும். அதுவரை விசாரணை வரும் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றார்.

டிக்கெட் வாங்க ஆளில்லை:

இதற்கிடையே இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி வரும் 2ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.இதற்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கமாக கிரிக்கெட்டுக்கு டிக்கெட் வாங்க கூட்டம் அலைமோதும். ஆனால், இன்று காலை முதல் வெறும் 12 பேர் மட்டுமேடிக்கெட் வாங்க வந்திருந்தனர். ஆனால் அவர்களும் டிக்கெட் வாங்கவில்லை. காரணம், நாளை முதல் தான் (1ம் தேதி)டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்று கவுண்டர்களில போர்ட் தொங்கிக் கொண்டிருந்தது.

இதற்கிடையே ஆளே இல்லாமல் போட்டியை நடத்துவதற்குப் பதில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா போட்டியைக் காண டிக்கெட்வாங்கியவர்களை இந்தப் போட்டியைக் காண அனுமதிக்கலாமா என்று தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் யோசித்து வருகிறதாம்.

போட்டிக்கு தடை கோரி வழக்கு:

இந் நிலையில் மழைக் காலத்தில் சென்னையில் போட்டிகளை நடத்த தடை விதிக்க வேண்டும், வரும் 2ம் தேதி நடக்கும்போட்டிக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சுரேஷ் பாபு என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+