மழை, நிலநடுக்க ஆராய்ச்சி: கலாம் யோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை - திருச்சி:

President Abdul Kalams helicopter readying for take off at Trichy airport
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று காலை ஹெலிகாப்டரில்பார்வையிட்டார்.

நேற்றிரவு தனி விமானம் மூலம் திருச்சி வந்த கலாம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், இன்று காலை 7 மணிக்குஹெலிகாப்டரில் கிளம்பினார். அவருடன் மாநில அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், அண்ணாவியும் சென்றனர்.

திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை அவர்ஆய்வு செய்தார். மேலும் திருச்சியிலும் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்டார்.

பின்னர் திருச்சி திரும்பி அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்த கலாம், ஐஐடியில் சர்வதேச பொறியியல் மாநாட்டைத்துவக்கி வைத்தார். அங்கு கலாம் பேசியதாவது:

சர்வதேச அளவில் நிலநடுக்கம் மற்றும் கன மழைகள் குறித்த ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். மழைக் காலத்தைத்துல்லியமாக கணிக்கும் ஆய்வுகளை தீவிரமாக்குவதோடு, மேகங்கள் சுமக்கும் நீரின் அளவைக் கண்டறியும் ஆய்வுகளும்தொடங்க வேண்டும்.

பேரழிவை ஏற்படுத்தும் கன மழைகள் அதிகமாகி வருகின்றன. ஆனால் மேகங்களின் நகர்வு, மேகங்கள் சுமக்கும் நீரில் அளவுஆகியவை குறித்து துல்லியமாக நம்மால் கணக்கிட முடியவில்லை.

மும்பையில் ஒரே நாளில் 950 மில்லி மீட்டர் மழை கொட்டியது. பெங்களூர், ஹைதராபாத்தையும் இப்போது தமிழகத்தையும்மழை புரட்டிப் போட்டுவிட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்டு இப்போது தான் மாநிலம் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த பேரழிவு வெள்ளம் வந்துவிட்டது.

இனி நம் கவனம் கால நிலை மாற்றங்களின் மீது இருக்க வேண்டும். இன்னும் எவ்வளவு நீர் நம் மீது கொட்டப் போகிறதுஎன்பதை முன் கூட்டியே அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கிறோம்.

1,000 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னர்களள் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்ட கொள்ளிடம் அணையே நிரம்பி நீரைஊர்களுக்குள் திருப்பிவிட்டுள்ளது. அவ்வளவு மழை பெய்திருக்கிறது.

1970ம் ஆண்டில் நான் ராக்கெட் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தபோது கால நிலையை ஆராயும் மெட்-ராக்கெட்டுகளை 3ஆண்டுகளுக்குள் உருவாக்குமாறு ஆணையிடப்பட்டேன். இப்போது பருவ நிலையை கண்காணிக்கும் ஏகப்பட்ட விண் கலங்கள்,செயற்கைக் கோள்கள் விண்ணைச் சுற்றி வந்தாலும் மேகங்களில் எவ்வளவு நீர் தேங்கியிருக்கிறது. அவை எவ்வளவு நீரைகொட்டப் போகின்றன என்பதை நாம் இன்னும் அறிய முடியவில்லை.

இந்தியா, ரஷ்யா, ஐஸ்லாந்து ஆகியவை இணைந்து நிலநடுக்கங்களை முன் கூட்டியே அறியும் தொழில்நுட்பம் குறித்தஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஐஸ்லாந்து கிட்டத்தட்ட இதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டு பிடித்தேவிட்டது என்றார் கலாம்.

பின்னர் ஐஐடி மாணவர்களுடன் கலாம் கலந்துரையாடினார். நானோ டெக்னாலஜியில் ஆரம்பித்து மூளைகளில் பயோ-சிப்கள்பொருத்துவது வரை பல்வேறு குறித்து அவர் விளக்கினார்.

ஒரு மாணவனின் கேள்விக்கு பதிலளிக்கையில், சில இடங்களில் மழையே இல்லை. சில இடங்களில் அநியாயத்துக்கு மழைபெய்கிறது. வைகை, காவிரி, பாலாறு, தாமிரபரணி ஆகிய தமிழகத்தின் முக்கிய நதிகளை இணைத்தாலே வெள்ள அபாயத்தைத்தடுத்திட முடியும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+