இந்தியா டுடே போட்ட குண்டு: சிக்கலில் நட்வர்
டெல்லி:
இராக்கின் எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் நட்வர் சிங்குங்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த பலன்கள் குறித்து இந்தியா டுடேஇதழ் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் வெடித்தது. இதையடுத்து ஏற்பட்ட பெரும் அமளி காரணமாகமக்களவையும் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.இப்போது இந்தியாவுக்கான குரேசிய நாட்டுத் தூதராக இருக்கும் அனில் மத்ராணி இந்தியா டுடேவுக்கு அளித்துள்ள சிறப்புப்பேட்டியில் பல உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார். முன்பு நட்வர் சிங்குக்கு மிக நெருக்கமாக இருந்தவர் அனில்.காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோது அக் கட்சியின் வெளியுறவு அணிக்கு நட்வர் சிங் தலைவராக இருந்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சியில் அவருடன் நெருக்கமாகப் பணியாற்றியவர் அனில்.
இந் நிலையில் இந்தியா டுடேவுக்கு அனில் அளித்துள்ள பேட்டியில்,
2000ம் ஆண்டில் நட்வர் சிங் இராக் சென்றார். அவருடன் நானும் சென்றேன். இந்தப் பயணத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் நட்வர் சிங் அனுமதி வாங்கினார். நட்வர் சிங்குடன் அவரது மகனும் வந்தார். அப்போது இராக்கின் எண்ணெயைஉலக அளவில் வாங்கி விற்க அந் நாட்டு துணை ஜனாதிபதி தாரிக் அஜீசிடம் நட்வர் சிங் கூப்பன்கள் வாங்கினார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் என்ற வகையில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இராக்கின் எண்ணெய்யை வாங்கிவிற்றனர் நட்வர் சிங்கும், அவரது மகனும், அவரது பிஸினஸ் பார்டனரும். இந்த முறைகேடு, பெட்ரோலிய விற்பனை மூலம்காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் லாபம் கிடைத்துள்ளது.
இவ்வாறு அனில் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த ஊழல் விவகாரத்தில் நட்வரின் பெயர் அடிபட்டதால் அவரிடம் இருந்து வெளியுறவுத்துறைபறிக்கப்பட்டுவிட்டது. இப்போது இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்கிறார்.
இந் நிலையில் இந்தியா டுடே போட்ட குண்டு நாடாளுமன்றத்தில் வெடித்தது.
ஐ.நாவின் இராக் எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் புதிதாக எப்ஐஆரி பதிவு செய்து நட்வர் சிங்கைக் கைது செய்ய வேண்டும்,இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது தேசிய ஆலோசனைக் குழுத் தலைவர்பதவியில் இருந்து விலக வேண்டும் என பாஜக தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் இரு அவைகளிலும் பெரும் அமளி ஏறப்பட்டது.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மத்திய நிதித்துறையின் கீழ் உள்ள அமலாக்கப் பிரிவின் (அன்னிய செலவாணிமோசடிகளை விசாரிக்கும் பிரிவு) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் இரு அவைகளிலும்தெரிவித்தார்.
ஆனால், பிரதமரின் பதிலால் திருப்தியடையாத பாஜக எம்பிக்கள் தொடர்ந்து கூச்சல், குழப்பம் செய்தனர். இது தொடர்பாகநீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோஷமிட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்களும் கோஷமிட்டதால் இன்றுமுழுவதும் இரு அவைகளிலும் எந்த அலுவலும் நடக்கவில்லை. இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன.
முன்னதாக இது குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோருடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
இன்று பிரச்சனை வெடிக்கலாம் என்பதால் சோனியா காந்தி நாடாளுமன்றத்துக்கு வரவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications