காங். காரிய கமிட்டியில் இருந்து நட்வர் நீக்கம்
டெல்லி:
ஐநாவின் இராக் எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் நடந்த முறைகேடுகளில் லாபம் அடைந்ததாகக் கருதப்படும் மத்திய அமைச்சர்நட்வர் சிங், காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தால் ஏற்கனவே வெளியுறவுத்துறையில் இருந்து நீக்கப்பட்டு, துறையில்லாத அமைச்சராக நீடித்து வந்தார்நட்வர்.இந் நிலையில், குரேஷியாவுக்கான இந்தியத் தூதர் அனில் மத்ரேனி இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், நட்வரும் அவரதுமகனும் இராக் சென்று எண்ணெய் விற்பனைக்கான டீல் செய்தது குறித்து விளக்கி பேட்டி அளித்தார்.
இதையடுத்து நட்வரை அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும்கேட்டுக் கொண்டனர். ஆனால், அதை ஏற்க நட்வர் மறுத்துவிட்டார்.
இந் நிலையில், நேற்றிரவு சோனியாவில் இல்லத்தில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் நட்வரை காரியக்கமிட்டியில் இருந்து விலக்க முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூதரிடம் விசாரணை:
இதற்கிடையே நட்வர் மீது குற்றம் சாட்டிய குரேசியாவுக்கான இந்தியத் தூதர் அனில் மத்ரேனி டெல்லிக்குத் திரும்பிஅழைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் வெளியுறவுத்துறை மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இராக் எண்ணெய் ஊழலில்நட்வரின் தொடர்பு குறித்து அமலாக்கப் பிரிவு தான் விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications