வெள்ளத்தை தவிர்த்திருக்கலாம்: ராமதாஸ்
சென்னை:
தமிழக அரசு உரிய முறையில் திட்டங்களைத் தீட்டியிருந்தால் சென்னை நகரில் பல லட்சம் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும்நிலையைத் தவிர்த்திருக்கலாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம், வேளச்சேர, மேடவாக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சிலபகுதிகளை ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் இன்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.கோட்டூர்புரத்தில் தண்ணீரில் மூழ்கியுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ள பகுதிக்கு படகில் சென்று நிவாரணப்பொருட்களை வழங்கினார் ராமதாஸ்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரூ. 500 கோடி நிவாரண நிதியை முதல் கட்டமாக பிரதமர் அறிவித்துள்ளார். அதுபோதாது என்று முதல்வர் ஜெயலிதா கூறுகிறார். கிடைப்பதை வைத்து முதலில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதை விட்டுவிட்டு அரசியல் ஆதாயம் தேடும் விதமாக பேசி வருகிறார் ஜெயலலிதா.
வெள்ள சேதங்களைப் பார்வையிட வந்த மத்திய குழுவுக்கு, மாநில அரசு அதிகாரிகள் போதிய விவரங்களை அளிக்கவில்லை.பிறகு எப்படி முழுமையாக சேத விவரங்களை மத்திய அரசு கணிக்க முடியும்?
எதிலெடுத்தாலும் அரசியல் செய்வது ஜெயலலிதாவின் பொழுதுபோக்காகிவிட்டது.
வெள்ள சேதத்தைப் பார்வையிட வருமாறு பிரதமரை தொடர்ந்து தொலைபேசியில் பேசி வற்புறுத்தி அழைத்திருக்க வேண்டும்முதல்வர். ஆனால் அதைச் செய்யாமல் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் அவர் பேசியும், நடந்தும் வருகிறார்.
வெள்ள சேதங்களைத் தடுக்கும் வகையிலும், வீணாக கடலில் போய் கலக்கும் வெள்ள நீரை சேமிப்பது குறித்தும் முன்னாள்பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சி.குப்புராஜ் தமிழக அரசுக்கு ஒரு திட்டத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பேஅளித்துள்ளார்.
அந்த அறிக்கையைப் பரிசீலித்து அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் சென்னை இந்த அளவுக்கு சேதத்தைசந்தித்திருக்காது. வெள்ள பாதிப்பையும், நீர் விரயத்தையும் தவிர்த்திருக்கலாம் என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications