இந்தியாவில் நார்வே பிரதமர்: இலங்கை குறித்து பேச்சு
டெல்லி:
இலங்கையில் தாங்கள் மீண்டும் மத்தியஸ்தம் செய்ய இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளின் உண்மையான ஒப்புதல்தேவை என்று நார்வே அறிவித்துள்ளது.
நார்வேயின் தலையீட்டை அதிபர் ராஜபக்ஷே எதிர்த்து வந்தார். நார்வே மூலமாக ஏற்பட்ட அமைதி ஒப்பந்ததுக்குப் பதிலாகபுதிய ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்றார்.நார்வேயை ஒதுக்கிவிட்டு அமைதி முயற்சிகள் குறித்துப் பேசி வந்தார். ஆனால், அந்த முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பலன்கிடைக்காத நிலையில், மீண்டும் நார்வே தலையிட வேண்டும் என்று நேற்று கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறு நார்வே விஷயத்தில் ராஜபக்ஷே சர்க்கஸ் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், நார்வே பிரதமர் ஜென்ஸ்ஸ்டோல்டென்பெர்க் இந்தியா வந்துள்ளார். 3 நாள் பயணமாக டெல்லி வந்துள்ள அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
பல சவால்களுக்குப் பின்னர் தான் இலங்கையில் அமைதி ஒப்பந்தத்தை எங்களால் ஏற்படுத்த முடிந்தது. போர் நிறுத்தஒப்பந்தத்தை அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும்.
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும்போது இலங்கை விவகாரம் குறித்துப் பேசுவேன். இலங்கை விஷயத்தில் இந்தியாவுடன்நார்வே ஆலோசனைகள் நடத்துவது மிக அவசியம்.
புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் துவக்க நாங்கள் உதவ வேண்டும் என்று இலங்கை அதிபர் கோரியுள்ளார். அதற்குநாங்கள் தயார் தான். ஆனால், அதற்கு இரு தரப்பினரின் உண்மையான ஒப்புதல் வேண்டும்.
இரு தரப்பினருடனும் நாங்கள் பேச்சு நடத்தி பேச்சுவார்த்தையை எப்படி மீண்டும் துவக்குவது என்பது குறித்து ஆலோசிப்போம்.இரு தரப்பும் தயாராக இருந்தால் தான் எங்களால் இதில் தலையிட முடியும்.
அரசுக்கும் புலிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தான் அமைதிப் பேச்சுவார்த்தை பாதியில் நின்றது. அதுமீண்டும் எப்போது தொடங்கும் என்பதை சொல்ல முடியாது. ஆனால், விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாங்கள் யாருக்கும் ஆதரவாக செயல்படவில்லை. அரசையோ, புலிகளையோ ஆதரித்து எங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. பலனடையப் போவது அவர்கள் தான். நாங்கள் கருவி, அவ்வளவு தான்.
அதே போல இலங்கை இனப் பிரச்சனைக்கு நாங்கள் தீர்வு எதையும் சொல்லவில்லை. யாரும் தீர்வைத் திணித்துவிட முடியாது.தீர்வு காண வேண்டியது அவர்கள் தான். நாங்கள் அதற்கு உதவுகிறோம்.
போர் நிறுத்தத்தை அனைத்துத் தரப்பும் மதிக்க வேண்டும். கொலைகள், வன்முறை யார் செய்தாலும் தவறு தான் என்றார் ஜென்ஸ்ஸ்டோல்டென்பெர்க்.
நார்வே வளர்ச்சித்துறை அமைச்சரான எரிக் சோல்ஹைம் தான் இலங்கை, விடுதலைப் புலிகளுக்கு இடையே அமைதித் தூதராகசெயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications