இராக் ஊழலில் வாஜ்பாய்க்கும் தொடர்பு?
டெல்லி:
ஈராக் எண்ணெய்க்கு உணவுத் திட்ட ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நெருங்கிய உதவியாளருக்கும்தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதன்மூலம் கிடைத்த லாபத்தில் வாஜ்பாயும் பலனடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது
பாஜகவால் நாடாளுமன்றத்தில் பெரிதாக்கப்பட்ட இந்த ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் பரிதவித்தது. இறுதியில் அமைச்சர்நட்வர் சிங்கை காவு கொடுத்தது.இந் நிலையில் இந்த விவகாரம் அப்படியே பூமராங் ஆகி பாஜகவை நோக்கியே திரும்பியுள்ளது. முன்னாள் வெளியுறவுத்துறைச்செயலாளர் ரொமேஷ் பண்டாரி அவுட் லுக் வார இதழக்கு அளித்துள்ள பேட்டியில் வாஜ்பாய்க்கும் இந்த ஊழலுக்கும்தொடர்புள்ளதாகக் குண்டு போட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
பாஜக தலைமையிலான கடந்த தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சியின் போது வாஜ்பாய்க்கு நெருக்கமான ஒரு நபர் அப்போதுஈராக் அதிபராக இருந்த சதாம் உசேனின் மகன் உதய்யுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்து, அவருடன் எண்ணெய் கடத்தலில்ஈடுபட்டார். அதில் வாஜ்பாய்க்கும் பங்கு கிடைத்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சிலர் மூலம் எனக்கு இந்த தகவல்தெரிய வந்தது.
இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது எண்ணைக்கு உணவு திட்ட ஊழலில் யார்-யார்? சம்பந்தப்பட்டுஉள்ளார்கள் என்பதை கண்டு அறிய விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பண்டாரி கூறியுள்ளார்.
இந்த ஊழலில் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் மகன்களுக்கும், வாஜ்பாயின் நெருங்கிய உதவியாளருக்கும் தொடர்புஇருந்ததாக பண்டாரியின் பேட்டி வெளியான பத்திரிகையை அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா தலையிலான காங்கிரஸ்உறுப்பினர்கள் மாநிலங்களவையில் காட்டி பிரச்சனையைக் கிளப்பினர்
மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்தகருத்தை இதர காங்கிரஸ் உறுப்பினர்களும் வலியுறுத்திப் பேசினர்.
ஆனால் இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டவாக்குவாத அமளியால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
குரேசியாவுக்கான இந்தியத் தூதர் சொன்ன புகாரை வைத்துத் தான் நட்வர் சிங்-காங்கிரஸ் மீது பாஜக பாய்ந்தது. இந் நிலையில்இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளரின் திடுக்கிடும் பேட்டியை வைத்துக் கொண்டு பாஜகவை நோக்கிகாங்கிரஸ் பாய்ச்சல் காட்டியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications