கடலூரில் தொடரும் கடல் கொந்தளிப்பு: அமராவதியில் வெள்ளம்
கடலூர்:
புயல் கரையைக் கடந்த நிலையிலும், கடலூரில் இன்று கடல் கொந்தளிப்பு காணப்பட்டதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள்பெரும் பீதியடைந்துள்ளனர்.
தமிழகத்தை மிரட்டி வந்த ஃபனூஸ் புயல், எந்தவித சேதம் இல்லாமல் வேதாரண்யம் அருகே நேற்று கரையைக் கடந்தது.இதையடுத்து அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நலையம் தெரிவித்திருந்தது. இதன்படி,நாகை, கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்தது.சென்னையில் மழை சற்று ஓய்ந்துள்ளது. இருப்பினும் வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கடலூரில்தொடர்ந்து இன்றும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. கடந்த நான்கு நாட்களாகவே கடலூரில் பல இடங்களில் கடல்கொந்தளிப்பு நிலவி வருகிறது.
தேவனாம்பட்டினம், அக்கரைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. புயல் போனபிறகும் கடல் கொந்தளிப்பு காணப்படுவதால் மீனவர்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. அவர்கள் யாரும் இன்றும்கடலுக்குப் போகவில்லை.
அமராவதியில் வெள்ளம்:
இதற்கிடையே, கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமராவதி நீர்ப்பிடிப்புப்பகுதிகளில் தொடர்ந்து கன மழைபெய்து வருவதால் ஆற்றுக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து அமராவதி அணையிலிருந்து விநாடிக்கு 21,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், அமராவதிஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது.
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோரப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குஅப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே பெருமாள் புதூர் என்ற இடத்தில் அமராவதி ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 4 பேரை தீயணைப்புப் படையினர், ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு கரை சேர்த்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications