போலி எப்ஐஆர்: மேலும் ஒரு அச்சக அதிபர் கைது
உடுமலைப்பேட்டை:
போலி எப்.ஐ.ஆர். அச்சடித்ததாக சேலத்தைத் தொடர்ந்து கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையிலும் ஒரு அச்சக அதிபரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினர் சிலரைக் கையில் போட்டுக் கொண்டு போலியான எப்.ஐ.ஆர் மற்றும் இதர போலீஸ் ஆவணங்களை அச்சடித்துதமிழகத்தின் பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களுக்கு விற்பனை செய்தது தொடர்பான மாபெரும் மோசடியில் சேலத்தைச்சேர்ந்த அச்சக அதிபர் சங்கரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக காவல்துறையினர் வட்டாரத்திலும்,பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக சங்கரை போலீஸ் காவலில் எடுத்துத் தீவிர விசாரணைக்கு உட்படுத்த சேலம் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.இந்த நிலையில் சேலத்தைத் தொடர்ந்து கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையிலும் ஒரு அச்சக அதிபர் போலீஸ் பிடியில்சிக்கியுள்ளார்.
உடுமலைப்பேட்டையில் அச்சகம் வைத்து நடத்தி வருபவர் சுந்தரராஜன். இவரது அச்சகத்தில் போலீஸார் சனிக்கிழமை அதிரடிசோதனை நடத்தினர். அப்போது அங்கு போலி எப்.ஐ.ஆர். அச்சடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சுந்தரராஜனைபோலீஸார் கைது செய்து பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.
சேலத்தைத் தொடர்ந்து உடுமலைப்பேட்டையிலும் போலி எப்.ஐ.ஆர் அச்சடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதால் போலீஸ்வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுந்தரராஜனை விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கக் கூடும்என்பதால் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, போலி எப்.ஐ.ஆரைப் பயன்படுத்தி வழக்குப் பதிவு செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில்தலைமைக் காலவர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பார்த்திபனூர் டாஸ்மாக் மதுக் கடையில் வேலை பார்க்கும்ஊழியர் ஒருவர், அவரே மது பாட்டில்களைத் திருடி விற்று விட்டு அவை கொள்ளை போய் விட்டதாக கதை கட்ட முடிவுசெய்துள்ளார்.
இதற்காக பார்த்திபனூர் காவல் நிலைய தலைமைக் காவலர் ஒருவரை உடந்தையாகக் கொண்டு போலி எப்.ஐ.ஆர்தயாரித்துள்ளார். இந்த போலி எப்.ஐ.ஆரை டாஸ்மாக் பொது மேலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதை உண்மை என்று நம்பிய நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டது. இந்த நிலையில்கொள்ளைச் சம்பவம் நடந்து பல மாதங்களாகியும் யாரும் பிடிபடாமல் இருப்பதை அறிந்த டாஸ்மாக் நிர்வாகம், இதுகுறித்துதுரித நடவடிக்கை எடுக்கும்படி, தங்களுக்கு வழங்கப்பட்ட எப்.ஐ.ஆர். நகலை இணைத்து மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளருக்கு புகார் மனு அனுப்பியது.
இந்த எப்.ஐ.ஆரை காவல்துறைக் கண்காணிப்பாளர் பார்த்தபோது அது போலியானது என்று தெரிய வந்தது. இதையடுத்துசம்பந்தப்பட்ட தலைமைக் காவலர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தற்போது கைது செய்துள்ளனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் புழக்கத்தில் இருந்து வந்த போலிஎப்.ஐ.ஆர். விவகாரம் தென் மாவட்டங்களுக்கும் பரவியுள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications