சைலேந்திர பாபுவுக்கு விருது: மக்கள் கோரிக்கை
சென்னை:
சென்னை நகரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க நேரடியாக களத்தில் இறங்கி துரிதமாகச் செயல்பட்ட தென்சென்னை காவல்துறை இணை ஆணையர் சைலேந்திர பாபு, துணை ஆணையர் தாமரைக் கண்ணன், கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர்ராஜேந்திரன் ஆகியோருக்கு விருது வழங்க வேண்டும் என்று கோரி சென்னை நகர பொதுமக்கள், தன்னார்வ நிறுவனங்கள் பலகுடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
சென்னை நகரில் கடந்த ஒன்றரை மாதமாக பெய்து வந்த கன மழை மற்றும் ஏரிகள், ஆறுகளிலிருந்து பாய்ந்த வெள்ளத்தால்நகரமே வெள்ளக்காடாகியது. அடையாறு, கூவம் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் கோட்டூர்புரம் பகுதியும், கன மழை மற்றும்ஏரிகள் உடைப்பு காரணமாக வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற பகுதிகளும் நீரில் மூழ்கின.இந்தப் பகுதிகளில் தென்சென்னை இணை ஆணையர் சைலேந்திரபாபு நேரடியாக களத்தில் இறங்கி மக்களை மீட்கும்நடவடிக்கையை மேற்கொண்டார். உச்சகட்டமாக கோட்டூர்புரத்தில் அவரும் அமைச்சர் ஜெயக்குமாரும் பணியன், டிரவுசருடன்நீரில் நீந்திச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்டும், உணவுப் பொருட்களைக் கொடுத்து அசத்தினர்.
போலீஸாருக்கு வெறுமனே உத்தரவுகளைப் பிறப்பிக்காமல் தானே களத்தில் இறங்கி மக்களை மீட்ட சைலேந்திரபாபுவின் செயல்கோட்டூர்புரம், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட தென் சென்னைவாசிகளின் பாராட்டைப் பெற்றது.
இவரைப் போலவே, கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனும் தண்ணீரில் நீந்திச் சென்றும், சுறுசுறுப்பாக செயல்பட்டு மக்களைபாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றும் அப்பகுதியில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க உதவினார்.
இதேபோல துணை ஆணையர் தாமரைக் கண்ணனும் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு மக்களது பாராட்டைப் பெற்றார்.இந்த மூன்று அதிகாரிகளின் துணிச்சலான மற்றும் தன்னலம் பாராத செயலைப் பாராட்டும் விதமாக மூவருக்கும் விருதுகள்வழங்கிக் கெளரவிக்க வேண்டும் என்று கோரி தென் சென்னை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் சார்பில் குடியரசுத்தலைவருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications