வியாபாரியை கொலை செய்த 4 காக்கிகளுக்கு ஆயுள் தண்டனை

Subscribe to Oneindia Tamil

கரூர்:

கரூர் காவல் நிலையத்தில் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 4 தலைமைக் காவலர்களுக்குஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள திருவிக மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்திருப்பவர் வேலுச்சாமி. கடந்த 1999ம் ஆண்டுஅக்டோபர் 31ம் தேதி இவரது கடைக்கு சிலர் வந்து தகராறு செய்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் கரூர் டவுன் காவல் நிலையத்திற்கு வந்தது. இதையடுத்து தலைமைக் காவலர்கள் அப்துல் சலாம், ராஜேந்திரன்,வைரவன், ஜெயராஜ் ஆகியோர் வேலுச்சாமி கடைக்கு வந்தனர்.

அவரிடம் என்ன ஏது என்று விசாரித்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு வருமாறு அவரை அழைத்தனர். அதற்கு வேலுச்சாமி,எனக்கும், இதற்கும் எந்த சம்பந்தம் இல்லை, யாரோ சிலர் வந்தார்கள், மார்க்கெட்டில் கலாட்டா செய்தனர், உங்களைப்பார்த்ததும் ஓடி விட்டனர்.

இதில் எனக்கு என்ன சம்பந்தம் உள்ளது என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நான்கு தலைமைக் காவலர்களும்,வேலுச்சாமியை கட்டாயப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வைத்து வேலுச்சாமியை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த வேலுச்சாமி மயங்கி விழுந்தார்.உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வேலுச்சாமி இறந்து போனார்.

இதுதொடர்பாக நான்கு பேரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.பணிநீக்கம் செய்யப்பட்ட நான்கு பேரும் பின்னர் ஒவ்வொருவராக வேலைக்கு சேர்ந்து விட்டனர்.

இவர்கள் மீதான வழக்கில் கரூர் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துநீதிபதி சம்பத் தீர்ப்பளித்தார். ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட தலைமைக் காவலர் ராஜேந்திரனின் மனைவி சப் இன்ஸ்பெக்டர்என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+