உசிலம்பட்டிக்குள் நுழைய திருமாவளவனுக்கு தடை
மதுரை:
மதுரை அருகே உள்ள உசிலம்பட்டி கிராமத்திற்குள் நுழைய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தைச் சேர்ந்த பழனிமுருகன் என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் சிலநாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டார்.
படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக உசிலம்பட்டிபோலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முருகனின் வீட்டுக்குச் சென்று துக்கம் கேட்க திருமாவளவன் உசிலம்பட்டிக்கு வரவிருந்தார். ஆனால்திருமாவளவன் வந்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவும் என்று கூறி தாசில்தார் ராமலிங்கம், திருமாவளவன்உசிலம்பட்டிக்கும், மாதரை கிராமத்திற்கும் வர தடை விதித்தார்.
3வது அணிக்கு வாய்ப்பில்லை:
இந் நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் திருமா பேசுகையில், வரும் சட்டசபைத் தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியுடன்தான்விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி வைக்கும். அது எந்தக் கட்சி என்பதை தேர்தல் வரும்போது பேசி முடிவு செய்வோம். (இதுரொம்ப நல்லா இருக்கே
எந்தக் காரணத்தைக் கொண்டும் 3வது அணியை அமைக்க முயற்சிக்க மாட்டோம். தனியாகவும் போட்டியிட மாட்டோம்.
நான் எனது கட்சித் தொண்டர்களின் குடும்ப விழாக்கள், திருமண விழாக்கள், துக்கம் விசாரிக்கும் நிகழ்ச்சிகளுக்குப் போகமுயற்சித்தால் அதை காவல்துறை தடை உத்தரவு போட்டுத் தடுக்கிறது.
இப்போது கூட உசிலம்பட்டியில் எங்களது தொண்டர் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து துக்கம் விசாரிக்க செல்லமுயன்றபோது போலீஸார் தடுத்து விட்டனர். இதை சட்டப்பூர்வமாக சந்திக்க முடிவு செய்துள்ளோம்.
மதுரையில் அதிமுக பெண் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தும் கூட,தாழ்த்தப்பட்ட பெண் என்ற ஒரே காரணத்திற்காக வழக்கு கூட பதிவு செய்யாமல் உள்ளது காவல்துறை.
தமிழக மழை, வெள்ள பாதிப்பை தேசியப் பேரழிவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். சுனாமியால் அதிக உயிரிழப்புஏற்பட்டது. ஆனால் இப்போதோ பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டமாவட்டங்கள் நிலை குலைந்து போயுள்ளன.
மத்திய அரசிடமிருந்து வெள்ள நிவாரணத்தை வலியுறுத்திப் பெற மாநில அரசை கேட்டுக் கொண்டும், அனைத்துக் கட்சிக்கூட்டத்தை உடனடியாக நடத்தக் கோரியும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டத் தலைநகரங்களில் வியாழக்கிழமைஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் திருமாவளவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications