சூயஸ் நிறுவனத்துடன் சேது சமுத்திர ஒப்பந்தம்
சென்னை:
சென்னையில் நடந்த விழாவில், சூயஸ் கால்வாய் நிறுவனம், சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்துடன் இன்றுபுதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறை வேற்றுவதற்காக, சேது கால்வாய் திட்ட கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், சூயஸ்கால்வாய் திட்ட நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் இன்று காலை நடந்தது. இதில் சேது சமுத்திரக்கால்வாய் கழக தலைவர் ரகுபதி மற்றும் சூயஸ் கால்வாய் திட்ட நிறுவனத் தலைவர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி வரவில்லை. மாறாக வாழ்த்துச்செய்தியை அனுப்பியிருந்தார். நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு பேசுகையில்,
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பஉதவிகள், கட்டுமானப் பணிகளில் உதவி, பணியாளர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி ஆகியவற்றை சூயஸ் கால்வாய் நிறுவனம்வழங்கும்.
இதே போன்ற ஒரு ஒப்பந்தம், பனாமா கால்வாய் கழகத்துடனும் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications