குஷ்பு கார் மீது முட்டை வீசிய 4 பெண்கள் கைது
மேட்டூர்:
நடிகை குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்திற்கு வந்தபோது அவரது கார் மீது முட்டைகளை வீசி போராட்டம் நடத்திய பாமகவினர் 4பேரை போலீஸார் இப்போது கைது செய்துள்ளனர்.
கல்யாணமாகாத பெண்களின் கற்பு நிலை குறித்துப் பேசிய குஷ்புவைத் தண்டிக்கக் கோரி தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில்வழக்குகள் தொடரப்பட்டன.
மேட்டூர் நீதிமன்றத்திலும் குஷ்பு மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் நேரில் ஆஜராகத குஷ்புவுக்கு பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைய குஷ்பு கடந்த நவம்பர் 16ம் தேதி மேட்டூர் வந்தார்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் குஷ்புவைக் கண்டித்து செருப்புகள்,விளக்குமாறுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்தபோது குஷ்புவின் கார் மீது முட்டைகள்,செருப்புகள் வீசப்பட்டன.
குஷ்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீபத்தில் உயர்நீதிமன்றம்அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து மேட்டூர் சம்பவம் குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் மேட்டூர் தாசில்தார் பயஸ் முகம்மதுகான் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில், இரு கட்சிகளையும் சேர்ந்த 312 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதில் 25 பேர் கைதுசெய்யப்பட்டனர். 9 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீனில் விடுதலையாகினர்.
இந் நிலையில், சேலம் மாவட்ட பாமக மகளிர் அணி செயலாளர் பாக்கியலட்சுமி மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த வைஜெயந்தி,செல்வி, கருப்பாயி ஆகியோரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
நான்கு பேரும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications