ஆலப்புழை எக்ஸ்பிரசுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:
சென்னையிலிருந்து ஆலப்புழை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலால் சென்டிரல்ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து தினமும் இரவு 9.15 மணிக்கு ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில் கேரள மாநிலம் ஆலப்புழைக்கு கிளம்பிச்செல்லும். நேற்றிரவு இந்த ரயில் சென்டிரல் ரயில் நிலையம் வருவதற்கு முன்பாக யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.அப்போது மாலை 4.30 மணியளவில் ரயில்வே தீயணைப்பு நிலையத்திற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், ஆலப்புழைஎக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து காவல்துறைக்குத் தகவல் போனது. ரயில்வே போலீஸார், தீயணைப்புப் படையினர், வெடிகுண்டுகளைகண்டுபிடிக்கும் நிபுணர்கள் யார்டுக்கு விரைந்து சென்று ரயிலை முழுமையாக சோதனையிட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும்சிக்கவில்லை. போன் தகவல் புரளி எனத் தெரிய வந்தது.
வெடிகுண்டு புரளி ஏற்பட்டாலும் கூட வழக்கமான நேரத்திற்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. புரளி கிளப்பிய நபர் குறித்துபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications