இலங்கை: தமிழ் பெண் கற்பழிப்பு-திருமா போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையில் தர்ஷினி என்ற தமிழ்ப் பெண் கற்பழிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,கடந்த வாரம் இலங்கையில், தர்ஷினி என்ற தமிழ்ப் பெண்ணை இலங்கை ராணுவம் கற்பழித்துக் கொலை செய்துள்ளது. மேலும்,யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாணவர்களையும் தாக்கியுள்ளனர்.
தமிழினத்தை முழுமையாக நசுக்கும் நடவடிக்கையில் அதிபர் மகிந்தா ராஜபக்ஷே ஈடுபட்டள்ளார். தமிழ் உணர்வுகளை மதிக்காதஅவர் இந்தியாவுக்குள் கால் வைக்கக் கூடாது.
தமிழ்ப் பெண்ணைக் கற்பழித்துக் கொன்ற சிங்கள ராணுவத்தைக் கண்டித்தும், இலங்கை அதிபரைக் கண்டித்தும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வரும் 30ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெறும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications