அமைச்சர் பெயரை சொல்லி ஸ்வாஹா முயற்சி
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள மிகப் பிரபலமான கேம்பகோலா மைதானத்தை அமைச்சரின் பெயரைச் சொல்லி ஆக்கிரமிக்க வந்தகும்பல் கவர்னரின் தலையீட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளது.
25 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த மைதானம் லீ மெரிடியன் ஹோட்டல்ஸ் உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. கடந்த 40ஆண்டுகளாக இந்த நிலமும் உள்ளே இருக்கும் பங்களாவும் இவர்களிடம் உள்ளது.இங்கு அவ்வப்போது சினிமா சூட்டிங்குகள் நடப்பதுண்டு. பாபா படத்தின் பெரும்பகுதி இங்கு தான் எடுக்கப்பட்டது.
இந் நிலையில் கடந்த சனிக்கிழமை பெரம்பூரைச் சேர்ந்த மதியழகன் என்பவன் 50 பேர் கொண்ட தனது படை, பரிவாரத்துடன்இங்கு வந்துள்ளான். புல்டோசருடன் வந்த அந்தக் கும்பல் மைதானத்தின் காம்பவுண்ட் சுவரை இடிக்க ஆரம்பித்தது.
இதையடுத்து மைதானத்தில் இருந்த காவலாளிகள் அவர்களைத் தடுத்தனர். அப்போது அவர்களிடம் பேசிய மதியழகன், இதுஎன் நிலம். எட்டையபுரம் மகாராஜாவிடம் நான் தான் வாங்கினேன். என்னைத் தடுத்தால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்மூலமாக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டியுள்ளான்.
அமைச்சர் பெயரைச் சொல்லி இக் கும்பல் மிரட்டியதையடுத்து டெல்லியில் உள்ள மைதானத்தின் உரிமையாளருக்குத் தகவல்தந்தனர் காவலாளிகள். இந்தியாவின் முன்னணி ஹோட்டல் தொழிலதிபர்களில் ஒருவரான அவர் தனது தொடர்புகளைப்பயன்படுத்தி ஆளுநர் பர்னாலாவிடம் இது குறித்து புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து ஆளுநர் மாளிகை அதிகாரிகள் காவல்துறையிடம் பேச, கிண்டி போலீசார் அலறிக் கொண்டு ஓடிப் போய்மதியழகன் மற்றும் அவனுடைய 15 அடியாட்களைக் கைது செய்துள்ளனர்.
இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அந்தக் கும்பலை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கஉத்தரவிட்டார் நீதிபதி. இதையடுத்து இந்த 15ம் உள்ளே தள்ளப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications