சென்னையில் விடிய விடிய புத்தாண்டு உற்சாகம்
சென்னை:
2006ம் ஆண்டு பிறந்ததையொட்டி சென்னை நகரில் விடிய விடிய மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பலத்த போலீஸ்பாதுகாப்புக்கு மத்தியில் சென்னை நகரின் முக்கிய சாலைகளில் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.
2005ம் ஆண்டு முடிந்து 2006ம் ஆண்டு பிறந்துள்ளது. இதையொட்டி சென்னை நகரின் முக்கிய சாலைகள், மெரீனா கடற்கரை,பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் புத்தாண்டை வரவேற்றுநேற்று மாலை முதலே கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.அண்ணா சாலை, கடற்கரை காமராஜர் சாலை, மெரீனா பீச், எலியட்ஸ் பீச், கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில்மாலை 6 மணிக்கு மேல் மக்கள் கூட்டம் கூடத் தொடங்கியது.
நள்ளிரவு 12 மணி அடித்து 2 விநாடிகள் ஆன பின்னர் அனைவரும் போட்ட ஹேப்பி நியூ இயர் என்ற கூச்சலில் சென்னை நகரமேகுலுங்கிப் போயிருக்கும். இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமல்லாது குடும்பத்தோடு வந்தவர்களும் இந்த உற்சாகக்கொண்டாட்டத்தில் குதூகலமாக ஈடுபட்டனர்.
ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டும், இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் புத்தாண்டைவரவேற்று மகிழ்ந்தனர் சென்னை வாசிகள். மெரீனா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகே வெடிக்கப்பட்டபட்டாசுகளால், காந்தி சிலைக்கு காதே செவிடாகியிருக்கும்.
பொது இடங்கள் தவிர நட்சத்திர ஹோட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியிருந்தன. ஆட்டம், பாட்டம்கொண்டாட்டமாக புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். கோவில்கள், தேவாலயங்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்புவழிபாடுகள், அர்ச்சனைகள் நடத்தப்பட்டன.
விடிய விடிய மக்கள் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னை நகரின் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் அதிகாலை 4 மணிவரை செயல்பட்டன. மிக பலத்த போலீஸ் பாதுகாப்பும்,ரோந்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டதால் எந்தவிதஅசம்பாவிதம் இல்லாமல் புத்தாண்டு பிறந்தது.












Click it and Unblock the Notifications