சதி முறியடிப்பு: சேலம்-பெங்களூர் ரயில் விபத்திலிருந்து தப்பியது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கேஸ் சிலிண்டெர், கட்டர் உதவியோடு தண்டவாளத்தை வெட்டி ரயிலைக் கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது. இதனால்சேலத்திலிருந்து பெங்களூர் வந்த ரயில் புத்தாண்டில் பெரிய விபத்திலிருந்து தப்பியது.

நேற்று அதிகாலை 3 மணியளவில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலின்படி ஹெப்பால் அருகேநாகேனஹள்ளி ரயில் தண்டவாளத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தண்டவாளம் அருகே ஒரு கேஸ் சிலிண்டர்,தண்டவாளத்தை அறுக்கும் கட்டிங் ராடு ஆகியவை இருந்தன.

அங்கு நின்றிருந்த கபீர் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இது குறித்து நான் தான் போலீசுக்கு தகவல் கொடுத்தேன்.எனக்கு இந்த சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார். இருப்பினும் போலீஸ் அவரை தங்கள் கட்டுப்பாட்டில்வைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் குறிப்பிட்டுள்ள 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

சரியான நேரத்தில் சென்று இந்த உபகரணங்களை போலீசார் கைப்பற்றியதால் அதிகாலை 4 மணிக்கு சேலத்திலிருந்து பெங்களூர்வந்த ரயில் புத்தாண்டில் நடக்க இருந்த பெரிய விபத்திலிருந்து தப்பியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சேலம் ரயில் வேறு பாதையில் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால், நேற்று அதிகாலை ரயில்வேதுறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+