ஜன. 9ம் தேதி ஆண்டிப்பட்டி செல்கிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
தேனி:
முதல்வர் ஜெயலலிதா வரும் 9ம் தேதி தனது சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டிக்குச் செல்கிறார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியின் எம்.எல்.ஏ. ஜெயலலிதா. அங்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிக்கானகட்டடம் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத் திறப்பு விழா வருகிற 9ம் தேதி நடைபெறுகிறது.இதற்காக முதல்வர் ஜெயலலிதா 9ம் தேதி ஆண்டிப்பட்டிக்குச் செல்கிறார். இதே நிகழ்ச்சியில், தேனி மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார். இதுதவிர பல்வேறு நலத் திட்டங்களுக்கும் முதல்வர்இதே விழாவில் அடிக்கல் நாட்டி வைக்கிறார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 9ம் தேதி காலை விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம்ஆண்டிப்பட்டிக்குச் செல்கிறார் ஜெயலலிதா. இதையொட்டி ஆண்டிப்பட்டியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வரான பின்னர் ஜெயலலிதா தனது தொகுதிக்கு வருவது இது 6வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications