போன் ஒட்டு கேட்பு: ஜெவை சந்திக்கும் அமர்சிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெலிபோன் பேச்சுக்களை ஒட்டுக்கேட்ட விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத்தை நேற்று சந்தித்துப் பேசிய சமாஜ்வாடி பொதுச் செயலர் அமர் சிங் இன்றுசென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக சோனியாவுக்கு எதிராக பெரிய அளவில் பிரசாரம் செய்து வரும் சமாஜ்வாடிகட்சி மாநில முதல்வர்களின் ஆதரவைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. டில்லியில் உள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள்,கட்சியின் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலக டெலிபோன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சமாஜ்வாடி தலைவரும்உ.பி முதல்வருமான முலாயம்சிங் யாதவ் கடந்த வாரம் குற்றம் சாட்டினார்.

இதை உ

இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சிப் பொதுச் செயலர் அமர்சிங் நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ்கராத்தை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, டெலிபோன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தின் பின்னணியில் யார் உள்ளது என்பதைகண்டுபிடிக்க வேண்டும்.

இதற்கு சமாஜ்வாடி கட்சிக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்பிறகு பேட்டியளித்த அமர்சிங்என்னுடைய டெலிபோன் பேச்சுகளை உளவுத்துறை உயர் அதிகாரிகள் பதிவு செய்கின்றனர். சி.பி.ஐ என்மீது குறிவைத்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை இன்று அமர் சிங் சந்திக்கிறார்.சென்னை வரும் அவர் மதியம் 12 மணிக்கு ஜெயலலிதாவை சந்தித்து டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து ஆலோசனைநடத்த உள்ளார். இந்த விவகாரத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்க உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+