குடியரசு தினவிழா: சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெல்லியில் வரும் ஜனவரி 26ம் தேதி நடக்கவுள்ள குடியரசுத் தின விழாவை முறியடிக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகஉளவுத் துறைக்கு தகவல் வந்துள்ளது.

பெங்களூரில் விஞ்ஞானி சுட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கும் தீவிரவாதிகள் தீவிரமாக வேட்டையாடப்பட்டுவருகின்றனர். ஹைதராபாத், சென்னை, பெங்களூர், கோலார் ஆகிய ஊர்களில் முக்கிய தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளனர்.இதற்கிடையே டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள மாநிலங்களில் நடந்த தேடுதல் வேட்டையில் சிலர் பிடிபட்டனர்.

அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தலைநகர் டெல்லிக்குள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அல்-பதர் இயக்கதீவிரவாதிகள் ஊடுருவி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் டெல்லிக்குள் 12தீவிரவாதிகள் புகுந்து உள்ளது தெரியவந்துள்ளது.

தற்கொலைப் படை பிரிவை சேர்ந்தவர்களான இவர்கள் வரும் 26ம் தேதி நடக்கவுள்ள குடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதிதிட்டம் தீட்டி உள்ளதை உளவுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து மிகவும் உஷாராக இருக்கும் படி டெல்லி போலீசாரை மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. தற்கொலைப்படைதீவிரவாதிகள் 12 பேரின் பெயர் மற்றும் அடையாளங்களையும் உளவுத்துறை சேகரித்து டெல்லி போலீசாருக்கு கொடுத்துள்ளது.

அதே தினத்தில் ராணுவ முகாம்கள், அரசியல் தலைவர்கள் கூடும் முக்கிய இடங்கள் ஆகியவற்றையும் தாக்க திட்டமிட்டிருப்பதால்டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களும்சோதனைக்குட்படுத்தப்படுகிறது.

தீவிரவாதிகள் சாதரண மனிதர்களை போல் ரிமோட் வெடிகுண்டு, டைம்பாம் ஆகிவற்றுடன் சுற்றி வருவதாகவும் உளவுத் துறைஎச்சரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+