அமைச்சர் விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சமூக நலத்துறை அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமிக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்ததால் அவரது சேலம்வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் விஜயலட்சுமி பழனிச்சாமி. இவரது வீடு சேலம் சுப்பிரமணிய நகரில் உள்ளது.அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒரு கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல்துறைக்கு தகவல் போனது.
இதைத் தொடர்ந்து விஜயலட்சமியின் வீட்டில் ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது வீட்டுநுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி வைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் நடமாடுவோர் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். வாகன பரிசோதனையும் நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications