கருணாநிதியுடன் பிரணாப் முகர்ஜி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் சென்னை வந்தால் முதலில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப்பேசுவது வழக்கம். அந்த வகையில், இன்று சென்னைக்கு வந்த பிரணாப் முகர்ஜி, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதிவீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தார்.கருணாநிதியை சந்தித்த பிறகு வெளியே வந்த முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், பிறநாடுகளின் பாதுகாப்புவிஷயத்தில் இந்தியா தலையிடுவதில்லை. எந்த நாட்டுக்கும் ராணுவ ரீதியில், உதவுவதில்லை என்பது இந்தியாவின் கொள்கை.
இது இலங்கைக்கும் பொருந்தும். கடந்த 1970ம் ஆண்டு முதல் கருணாநிதி எனக்கு நெருங்கிய நண்பர். எனவே சென்னைக்குவரும் போதெல்லாம் அவரை சந்திக்காமல் போவதில்லை என்றார். இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும்உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications