உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு நீதிபதி பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய நீதிபதி இன்று பதவியேற்றுக் கொண்டார்.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு மொத்தம் 49 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் பெரும்பாலானபணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக இருந்தன.
இந் நிலையில் சமீபத்தில் ஒரே நாளில் 17 புதிய நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து காலியிடங்களின்எண்ணிக்கை 12 ஆகக் குறைந்தது.
இந்தச் சூழிலில் ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த தர்மாராவ் சென்னைக்கு மாற்றப்பட்டார். அவர் இன்றுபதவியேற்றுக் கொண்டார். தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்துகாலியிடங்களின் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications