சு.சுவாமி: முலாயமுக்கு ஆதரவு-ஜெவுக்கு எதிர்ப்பு
சென்னை:
நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உருவாகியிருப்பதால், மத்திய அரசைக் கலைக்க குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெங்களூரில் விஞ்ஞானி பூரி தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்ட விதம், பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை உணர்த்துகிறது.மத்திய அரசின் மெத்தனப் போக்கால் தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளன.பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வந்தால்தான் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த முடியும். தீவிரவாதஅமைப்புகளுடன் அரசு பேச்சுவார்த்தையே நடத்தக் கூடாது.
டெல்லியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிகறது. அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் என சமூகத்தின்அனைத்துப் பொறுப்புகளிலும் உள்ளவர்களின் தொலைபேசிகளும் ஒட்டு கேட்கப்படுகின்றன. இதனால் போனில் பேசவேஅனைவரும் பயப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த விஷயத்தை ஆதாரப்பூர்வமாக வெளிக் கொண்டு வந்த உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் பெரிய தேசிய சேவையைச்செய்துள்ளார்.
ஆனால், அதே நேரத்தில் என் தொலைபேசிகளும் ஒட்டு கேட்கப்படுகின்றன என தமிழக முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருப்பதுசிறுபிள்ளைத்தனமானது. உங்களுக்குத் தெரியாமல் உங்கள் தொலைபேசியை எப்படி யாரும் ஒட்டு கேட்க முடியும். ஆதாரம்இல்லாமல் எதையாவது ஜெயலலிதா சொல்லக் கூடாது.
ஒரு முதல்வராக இருப்பவருக்கு அதற்குரிய ஆதாரங்களைத் திரட்ட அனைத்து வசதிகளும் உள்ள நிலையில், எந்த ஆதாரமும்இல்லாமல் சும்மா, என் போனும் ஒட்டு கேட்கப்படுவதாக நினைக்கிறேன் என்று ஜெயலலிதா சொல்வது ஆச்சரியமாக உள்ளது.
அதே நேரத்தல் தங்களுக்கு சாதகமாக இல்லாதவர்களைப் பணிய வைக்க வருமான வரி ரெய்டு, அந்த ரெய்டு, இந்த ரெய்டு எனமிரட்டி வருகிறது மத்திய அரசு. யாரும் தங்களை கேள்வி கேட்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவர்கள் செயல்பட்டுவருகிறார்கள்.
நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மையைக் கருத்தில் கொண்டு இந்த அரசை நீக்கி விட்டு, மாற்று அரசை ஏற்படுத்த குடியரசுத்தலைவர் முன்வர வேண்டும்.
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரேஷன் மானியத் தொகையை மத்திய அரசு நீக்கியதைக் கண்டித்து குரல்எழுப்பாமல், இலங்கைக்கு ராணுவ உதவி செய்யக் கூடாது என பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் கோரிக்கை எழுப்புகின்றன.
இதற்கு அந்தக் கட்சிகள் தான் விளக்கம் தர வேண்டும் என்றார் சுவாமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications