ஜெ. கட்டிய பாலங்கள் இடிந்ததே..: கருணாநிதி
சென்னை:
கரூர் அமராவதி பாலம் தொடர்பாக என் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று திமுக தலைவர்கருணாநதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ஜெயலலிதாவின் வழக்கை சட்டரீதியாக நாங்கள் சந்திப்போம். இதே ஜெயலலிதா ஆட்சியில் கடலூர் சிங்காரத்தோப்பில் ரூ. 6கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்தது. அதற்கு யார் விசாரணைக் கமிஷன் வைப்பது?. யார் மீது வழக்குப் போடுவது?
நாகை அருகே அக்கரைப்பேட்டையில் ரூ. 1 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் முடிக்கப்பட்ட ஒரே ஆண்டில் கல்லார் ஆற்றுவெள்ளத்தில் கரைந்து காணாமல் போனதாக செய்திகள் வந்தது. அந்த இடத்தை பார்வையிட்ட ஜெயலலிதா, ஐந்துமாதங்களில் அப்பாலம் மீண்டும் கட்டப்படும் என்றார். ஆனல் இன்னும் அதற்குரிய மதிப்பீடு கூட செய்யப்படவில்லை.
அதேபோல திருவள்ளூர் மாவட்டம் லட்சுமிபுரத்தில் ஐந்தரை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டது. ராமநாதபுரம் அருகே தொழுவலூர்-காரையேந்தல் பாலமும் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாதநிலையிலேயே இடிந்து உடைந்ததாக செய்திகள் வந்தன. இவற்றுக்கெல்லாம் யார் மீது விசாரணைக் கமிஷன் வைப்பது?
எனவே என் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை அரசியல் உள்நோக்கத்துடன், பழிவாங்கும் செயலாகவே கருத வேண்டும். தேர்தல்நேரத்தில் திமுகவுக்கும், தோழமைக் கட்சிகளுக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கைபோட்டுள்ளார்கள்.
எனது போனும் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஜெயலலிதா சொல்லியுள்ளது, மக்களிடம் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காகத்தான்.அமர்சிங்கின் தொலைபேசி பேச்சு ஒட்டுக் கேட்கப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான்.
பாலாற்றில் அணை கட்டப்படுவதை எதிர்த்து ஜெயலலிதா திடீரென குரல் கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு முன்பாகவேபாமக, திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் எதிர்ப்பு காட்டி விட்டன. ஜெயலலிதா திடீரென விழித்துக் கொண்டு அறிக்கைவெளியிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் சேரலாம். இன்னும் அதுகுறித்துப் பேசும் நேரம் வரவில்லை. தொகுதிப் பங்கீடுதொடர்பாகவும் இன்னும் பேசவில்லை. நாங்கள் கூடிப் பேசினாலே தொகுதி உடன்பாட்டுக்காகத்தான் என்று அர்த்தமா?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திமுக கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக இன்னும் திட்டவட்டமான முடிவு எதையும்எடுக்கவில்லை. எல்லாவற்றையும் யோசித்தே முடிவு செய்வோம் என்றார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications