கொள்ளிடத்தில் ரூ. 34 கோடியில் புதிய பாலம்: ஜெ
சென்னை:
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ. 34 கோடியில் புதிய பாலம் ஒன்று கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் இடது கரையில் இருக்கும் 16கிராமங்கள், வட கரையில் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் 15 கிராமங்கள் உள்பட மொத்தம் 33 கிராமங்களுக்கு பலன்கிடைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ. 34 கோடியில் புதிய பாலம் கட்ட உத்தரவு பிறப்பித்துள்ளேன்.இந்த புதிய பாலம் மூலம் 33 கிராமங்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். தற்போது இந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள்அடுத்த கிராமத்திற்குச் செல்ல வேண்டுமானால் அல்லது வேறு எங்காவது செல்ல வேண்டுமானால், ஆற்றின் குறுக்கே நடந்துதான்செல்ல வேண்டியுள்ளது.
சுமார் 1.2 கிலோமீட்டர் தொலைவை அவர்கள் நடந்து கடப்பது மிகவும் கடினமான செயல். அதுவும் மழைக்காலங்களில் இந்தக்கிராமங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல்போய் விடுகிறது.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தங்களுக்குப் புதிய பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று இந்த கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். அதைப் பரிசீலித்து, 33 கிராமங்களும் பயன் அடையும் வகையில் புதிய பாலம் கட்ட உத்தரவிட்டுள்ளேன்.
இப்பாலம் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதோடு, வணிகத் தொழிலும் விரிவடையும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications