For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்போ தான் இந்தியா ஒளிர்கிறது: ப.சி

By Staff
Google Oneindia Tamil News

செங்கல்பட்டு:

நடப்பாண்டில் 50 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கிக் கிளையும்குறைந்தது நூறு விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழாசெங்கல்பட்டில் நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட சிதம்பரம் பேசியதாவது:

மக்களுக்கு நேரடியாக பயன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் விழாக்கள் மூலம் மக்களுக்கு கடன்வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.80,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் புதிதாக 50லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வங்கிக் கிளையும் குறைந்தது நூறு விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு 1.5 கோடி கடன்வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை தாண்டி 1.15 கோடி கடன் வழங்கப்பட்டது. நடப்பாண்டு ஒரு லட்சத்து42 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேல்படிப்பு படிக்கும் இரண்டு லட்சம் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு கல்விக் கடன் வழங்கப்பட்டது. இவ்வளவுமாணவர்களுக்கு தான் கடன் என உச்சவரம்பு எதுவும் கிடையாது. எத்தனை மாணவர்களுக்கு வேண்டுமானாலும் கடனாக ரூ.4லட்சம் வரை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் செலுத்த வசதி இல்லாமல் படிப்பை பாதியில் விடக்கூடாது என்பதற்காகவே இந்தநடவடிக்கை. ஜாமீன், பத்திரம், அடமானம் எதுவும் இல்லாமல் பெற்றோரின் கையெழுத்தை பெற்றுக் கொண்டு கடன் வழங்கவசதி செய்யப்பட்டுள்ளது.

மகளிர் குழுக்களுக்கு ஏன் கடன் வழங்குகிறோம் என்றால் பெண்களே பொறுப்புமிக்கவர்கள். தன்மானம், பொறுப்புமிகுந்தவர்களாக தமிழகப் பெண்கள் விளங்குகின்றனர். 98 சதவீதம் முதல் நூறு சதவீதம் வரை கடனை திரும்ப செலுத்தும்சமுதாயம் பெண்கள் சமுதாயம்.

வங்கியில் சேமிப்பவர் புத்திசாலி. கடன் வாங்குபவர் அதிபுத்திசாலி. ஏனெனில் கடன் பெற்று தொழிலை விருத்தி செய்துமுன்னேறுகின்றனர். கடன் வாங்குவது குற்றமல்ல. லஞ்சம் வாங்குவதே குற்றம்.

இன்றையக் கடனை திருப்பி செலுத்தினால் தான் எதிர்காலத்தில் கடன் வழங்க முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட தற்போது பணப்புழக்கம் அதிகரித்து நாடு சுபிட்சமாக உள்ளது என்று பேசினார் சிதம்பரம்.

இதே மாதிரி தான் இந்தியா ஒளிர்கிறது என்று பாஜகவினர் கோஷம் போட்டு ஆட்சியை இழந்தார்கள். இதை ப.சி. மறக்காமல்இருப்பது நல்லது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X