கலெக்டர்கள் மீது திமுக வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தயாரித்துள்ள பிரசார குறும்படத்தை திரையிட அனுமதி தராத மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்புவழக்குத் தொடர அக் கட்சி முடிவு செய்துள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் தேர்தல் பிரசாரத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள குறும் படத்தைத் திரையிட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பலர்அனுமதி அளிக்காமல் உள்ளனர். இதுவரை ஐந்து மாவட்டங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அனுமதி கொடுப்பதில் பெரும் தாமதம் செய்து வருகிறார்கள்.எனவே உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், வேண்டும் என்றே தாமதம் செய்யும் ஆட்சித் தலைவர்கள் மீது சட்டப்படிநடவடிக்கை எடுக்க, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications