மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல்?
Subscribe to Oneindia Tamil
கோவை:
தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் கோவையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தேர்தல் ஆணையர் பி.பி. டாண்டன்கூறியதாவது:தேர்தல் தேதி மற்றும் ஒரே கட்டத் தேர்தல் ஆகியன குறித்து இன்னும் தேர்தல் ஆணையம் முடிவு செய்யவில்லை என்றாலும்கல்லூரித் தேர்வுகள் மற்றும் பருவநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தேர்தல் நடத்தப்படும் என்றார்.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுவை மாநிலங்களுக்குத் தேர்தல் நடக்க உள்ளது. இம் மாநிலங்களில் தமிழகசட்டப்பேரவை ஆயுள் காலம் மே 21ம் தேதியும், மேற்கு வங்கத்தின் பேரவை ஆயுள் காலம் ஜூன் 13ம் தேதியும்முடிவடைகின்றன.
புதிய பேரவைகள் இதற்குள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கேற்ப தேர்தல் நடத்தப்படும். மேலும் பள்ளி, கல்லூரி தேர்வுகளைகருத்தில் கொண்டு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications