பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ். மனோகர் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

R.S.Manohar

தமிழ் பட உலகின் பழம்பெரும் வில்லன் நடிகரும், மிகப் பிரபலமான நாடக நடிகருமான ஆர்.எஸ்.மனோகர் காலமானார்.அவருக்கு வயது வயது 81.

வெகு நாட்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 22ம் தேதி மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார். இதனால் தலையில் காயம் ஏற்பட்டது. உடனேஅவரை நந்தனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மனோகர் சுய நினைவைஇழந்தார்.

இந் நிலையில் அவரது உடல் நிலை இன்று அதிகாலை மிகவும் மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர்இறந்தார்.

மனோகரின் உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குஎடுத்து வரப்பட்டது. அங்கு நடிகர்-நடிகைகள் நாடக கலைஞர்கள் மற்றும் பிரமுகர்கள், ரசிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர்.

நாளை காலை பெசன்ட் நகர் சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

ஜெ. இரங்கல்:

மனோகரின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.மனோகர் நடிப்பாற்றல் மிக்கவர். தமிழ் நாடகக் கலைக்கு தனிப்பெருமைசேர்க்கும் வகையில் பிரமாண்டமான சரித்திர மற்றும் புராண நாடகங்களை அளித்தவர்.

200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 8000க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்து சாதனை படைத்தவர். அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனையைத் தருகிறது. மனோகரின் மறைவு திரைத்துறைக்கு இழப்பு என்றால் நாடகத் துறைக்குபேரிழப்பாகும். மனோகரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபத்தையும்தெரிவித்துக் கொள்கிறேன்.

மனோகர் அவர்களின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.

நாடகக் காவலர் என்று அழைக்கப்படும் மனோகர் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தை 1000றைக்கும் மேல் அரங்கேற்றிசாதனை படைத்துள்ளார். அதேபோல சாணக்கியன் சபதம், விஸ்வாமித்திரர் ஆகிய நாடகங்களையும் 700க்கும் மேற்பட்டமுறை அரங்கேற்றி சாதனை படைத்தவர்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் உள்ளிட்ட ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்த பெருமையைப் பெற்றவர். வில்லன், குணச்சித்திரவேடம் என பல வேடங்களில் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி, எம்.ஜி.ஆர். விருது ஆகியவற்றைப் பெற்றவர்மனோகர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+