பாலாறு விவகாரம்: ஆந்திர எல்லைக்குப் பாதயாத்திரை - பாஜக

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்த்து ஆந்திர மாநில எல்லை வரை பேரணி நடத்த பாஜகதிட்டமிட்டுள்ளதாக தமிழகத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநில அரசு, குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்டத் திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள்அத்தனையும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

முதல்வர் ஜெயலலிதா ஆந்திர மாநில முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அணை கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறுகோரியுள்ளார்.

திமுக கூட்டணி சார்பில் வேலூரில் விவசாயிகளின் கூட்டம் கூட்டப்பட்டு ஆந்திர அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இதுதொடர்பாக பிரதமரை சந்தித்து முறையிடவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்த நிலையில் பாஜக சார்பில் வேலூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட பாஜக சார்பில் தலைமைத்தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றுத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டும் திட்டத்தை மத்திய அரசுஉடனே தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழகமே பெரும் எரிமலையாகி விடும்.

கர்நாடக அரசும், ஆந்திர அரசும் தமிழகத்தை வடிகாலாக மட்டுமே பார்க்கின்றன. அத்தனை தண்ணீரையும் தாங்களே தேக்கிவைத்துக் கொண்டு, வெள்ளம் வந்தால் மட்டும் மிச்ச, மீதி நீரை தமிழகத்திற்கு அனுப்பினால் போதும் என அவை நினைக்கின்றன.

வறட்சி காலங்களில் ஒரு சொட்டு நீரைக் கூட தமிழகத்திற்குத் தருவதில்லை என்று அவை தீர்மானமாக நினைக்கின்றன. கடந்தகாலத்தில் ஆந்திர தல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, இந்த அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றவில்லை.

தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு அவ்வாறு அவர் செயல்பட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ இன்று தமிழக நலனைமுற்றிலும் புறக்கணிக்கும் வகையில் அணையைக் கட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளது.

பிராந்தியக் கட்சியின் தலைரான சந்திரபாபு நாயுடு நியாயத்தோடு நடந்து கொண்ட அதே வேளையில், தேசியக் கட்சி என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸ், சமூக மாநிலத்தின் நலனைப் புறக்கணிக்கும் வகையில் செயல்படுவது வெட்கக்கேடானது.

ஆந்திர மாநில அரசின் முயற்சிகளைக் கைவிடக் கோரி குடியாத்தத்தில் இருந்து 26ம் தேதி காலை பாதயாத்திரை தொடங்கிஆந்திர மாநில எல்லை வரை செல்லவுள்ளோம். அங்கு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+