16ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
Subscribe to Oneindia Tamil
அலங்காநல்லூர்:
மதுரை அருகே அலங்காநல்லூரில் வரும் 16ம் தேதி உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கானஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையும் சுற்றுலாத்துறையும் செய்து வருகின்றன.ஜல்லிக்கட்டை பார்க்க வரும் பார்வையாளர்களின் வசதிக்காக மதுரை, வாடிப்பட்டி, அழகர்கோயிலில் இருந்து கூடுதல் பஸ்கள்இயக்கப்படவுள்ளன. ஜல்லிக்கட்டு மாடு கொண்டு வரும் உரிமையாளர்களுக்கும் உடன் வருவோருக்கும் என தென்னவன்இளைஞர் அணி, சென்னை தொழில் அதிபர் பாண்டியன் ஆகியோர் சுமார் 3,000 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
மாடு பிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் விளம்பரதாரர்கள் மூலம் தங்க காசு, வெள்ளி காசு உட்பட பரிசுகள்வழங்கப்படவுள்ளது.
குடி நீர் வசதி, பொது சுகாதாரம், ஜல்லிக்கட்டிற்கு வரும் வெளிநாட்டினரை கிராமிய கலாச்சார முறைப்படி வரவேற்பது போன்றஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications