பிறப்பதற்கு முன்பே குழந்தைக்கு பெயர் வைத்த கட்சி!
கோவை:
சட்டசபைத் தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சர்வஜன ஆத்மீக அரசியல் இயக்கம் என்ற கட்சி, தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அசத்தியுள்ளது.
சட்டசபைத் தேர்தல் தொடர்பான பூர்வாங்க வேலைகளில் முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. யாருக்குஎத்தனை சீட் கொடுப்பது, நமக்கு எது சாதகமான தொகுதி என்பது உள்ளிட்ட பல்வேறு கவலைகளில் இந்தக் கட்சிகள் மூழ்கிக்கிடக்கின்றன.ஆனால், இப்படி எந்தக் கவலையும் இல்லாத ஒரே கட்சியாக கோவையைச் சேர்ந்த சர்வஜன ஆத்மீக அரசியல் இயக்கம் என்றகட்சி திகழ்கிறது. இந்தக் கட்சியின் பெயரையே யாரும் இதுவரை அறிந்திராத நிலையில், தனது முதல் வேட்பாளர் பட்டியலைவெளியிட்டு அசத்தியுள்ளது இந்தக் குட்டிக் கட்சி.
முதல் கட்டமாக கோவை மாவட்டத்தில் உள்ள 14 சட்டசபைத் தொகுதிகளுக்கும் தனது கட்சியின் வேட்பாளர்களைஅறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் இக்கட்சி போட்டியிடப் போகிறதாம்.
வேட்பாளர்களை அறிவித்த கையோடு தேர்தல் பிரசாரத்தில் குதித்து, உங்க ஓட்டு எங்களுக்கே என்று முழங்கவும் ஆரம்பித்துவிட்டனர் இந்தக் கட்சியின் தொண்டர்கள்.
ஆனாலும் இவுங்க ரொம்ப ஸ்பீடு...












Click it and Unblock the Notifications