ஏ.சி.சண்முகம் மலேசியாவில் பதுங்கல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய நீதிக் கட்சித் தலைவரும், கூவம் ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நிகர் நிலைப் பல்கலைக்கழகவேந்தருமான ஏ.சி.சண்முகம் கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக மலேசியா சென்று விட்டதாக கூறப்படுகிறது.

சென்னை மதுரவாயலில், கூவம் ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள ஏ.சி.சண்முகத்தின் பெரும்பாலான கல்லூரிக்கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. அவர் மீது மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் கல்விக் கட்டணத்தைத் திருப்பிக் கேட்ட மாணவரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஏ.சி.சண்கத்திற்கு முன் ஜாமீன்கிடைத்துள்ளது. மற்ற இரு வழக்குகளில் இன்னும் முன் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் ஏ.சி.சண்முகம் தலைமறைவாகஉள்ளார்.

அவரைப் பிடிக்க போலீஸார் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இருப்பினும் ஏ.சி.சண்கம் தற்போது இந்தியாவிலேயேஇல்லை என்றும் மலேசியாவில் அவர் அடைக்கலம் புகுந்துள்ளார் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. சென்னை போலீஸாரின்நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக மலேசியாவக்கு அவர் தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

முன் ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் அவர் அவ்வளவு சீக்கிரம் சென்னைக்குத் திரும்ப மாட்டார் என்றும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+