திமுக கூட்டணி வெற்றி ரொம்ப கஷ்டம்: சோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல என்று எழுத்தாளர்சோ ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

துக்ளக் பத்திரிக்கையின் 36வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ஆசிரியர் சோ ராமசாமி பேசுகையில்,

இதுவரை இல்லாத அளவுக்கு வரப் போகும் சட்டசபைத் தேர்தல் மிகவும் விறுவிறுப்பானதாகவும், பல்வேறு திருப்பங்கள்,சுவாரஸ்யங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். திமுக கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருப்பதால் அந்தக் கூட்டணி பலமானதாகத் தோன்றலாம்.

ஆனால் உண்மையில் கட்சிகள் அதிகம் இருப்பதைப் போல பிரச்சினைகளும் அங்கு அதிகம். வெற்றியைப் பெற திமுக கூட்டணிகடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

ஆனால் அதேசமயம், முதல்வர் ஜெயலலிதாவின் செல்வாக்கு மக்களிடையே நன்கு அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத்தேர்தலின்போது ஜெயலலிதா மீது கொண்டிருந்த கருத்து மக்களிடம் இப்போது இல்லை.

இந்தத் தேர்தலே கருணாநிதியா, ஜெயலலிதாவா என்பதுதான். அதை விட இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால்ஸ்டாலினா, ஜெயலலிதாவா என்றுதான் மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள். காரணம், ஸ்டாலினை பதவியில் அமர்த்தகருணாநிதி தீவிரமாக இருக்கிறார். கருணாநிதியின் வாரிசாக ஸ்டாலின்தான் வரப் போகிறார் என்பதை மக்களும் அறிவர்.

ஆனால் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டால் ஸ்டாலின் ரொம்பச் சிறியவராக இருக்கிறார். தேசியப் பிரச்சினைகள், உலகப்பிரச்சினைகள், உள்ளூர்ப் பிரச்சினைகளில் அவர் என்ன கருத்து வைத்துள்ளார் என்பது தெளிவாக இல்லை. அவர் ஒரு பெரும்குழப்பவாதியாகவே இருக்கிறார்.

எந்தக் கருத்தையும் கொள்ளாத ஒருவருக்கு ஓட்டுப் போடுவதை விட இதில் எல்லாம் பல மடங்கு சிறந்த ஜெயலலிதாவுக்குஓட்டுப் போடுவது நல்லது என்று மக்கள் நினைத்தால், திமுக கூட்டணியின் வெற்றி அவ்வளவுதான்.

கருணாநிதியைப் பொறுத்தவரை ஸ்டாலினும், தயாநிதி மாறனும்தான் இப்போதைக்கு முக்கியம். ஸ்டாலினை மாநில அளவிலும்,தயாநிதியை தேசிய அளவிலும் உயர்த்துவதே அவரது லட்சியமாக உள்ளது.

அதேசமயம், பாமகவைப் பொறுத்தவரை சன் டிவியைத் தவிர மற்ற அனைவரையும் மிரட்டி வருகிறது. மிரட்டல் அரசியலைஅக்கட்சி கடைப்பிடிக்கிறது. மதிமுக ஈழத்துக் குடிமகனாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன் என்று பேசி வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சோனியா சொல்வதைத்தான் கேட்டாக வேண்டும். சுயமாக அவர் எதையும் செய்து விடமுடியாது.

இவர்களுடன் ஒப்பிடுகையில் ஜெயலலிதா பல மடங்கு உயர்ந்து நிற்கிறார். மக்கள் செல்வாக்கை அதிகரித்துள்ளார். திறம்பட்டநிர்வாகத்தை கொடுத்துள்ளர். சுனாமி, மழை வெள்ள நிவாரணப் பணிகளில் மிகவும் திறம்பட செயல்பட்டு மக்களின் கவனத்தைஈர்த்துள்ளார். வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளிலும் அவர் திறமையாகசெயல்பட்டுள்ளார்.

எனவே அதிமுக தனிக் கட்சியாகத் தோன்றினாலும் கூட ஜெயலலிதா சொன்னதுபோல மக்களுடன் அக்கட்சி கூட்டணிஅமைத்துள்ளது. எனவே திமுகவினர் சற்று அசட்டையாக இருந்தாலும் கூட அதிமுகவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும்வாய்ப்புதான் இப்போதைக்கு நிலவுகிறது என்றார் சோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+