திருச்சி சிறையில் காலரா?: 200 கைதிகள் அவதி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

கெட்டுப் போன பொங்கல் சாப்பிட்டதால் கைதிகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதாக கூறப்பட்ட திருச்சி மத்திய சிறையில் காலராபரவியிருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது.

திருச்சி மத்திய சிறையில் 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள கைதிகளுக்கு மாட்டுப் பொங்கல்தினத்தன்று பொங்கல் உணவு வழங்கப்பட்டது. இதை கைதிகள் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி, பேதி ஏற்பட்டு மயங்கிவிழுந்தனர்.

100க்கும் மேற்பட்ட கைதிகள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டது. கடுமையாக பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட கைதிகள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அவர்களைப் பரிசோதித்ததில் காலரா ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து சிறைக்குள் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற கைதிகளுக்கும் தீவிர பரிசோதனைநடத்தப்பட்டுள்ளது. குடிநீர் மாசு காரணமாகவே இது நேரிட்டுள்ளதாகவும், பொங்கலில் பிரச்சினை இருந்ததாகத்தெரியவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறையில் வழங்கப்படும் குடிநீர் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து 200 கைதிகளுக்குமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கும் காலரா பரவாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+