தேர்தலில் வெற்றி உறுதி: ஜெ நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சரித்திரம் என்பதே சில தனி மனிதர்களின் வாழ்க்கை வரலாற்று தொகுப்பு தான். இந்த உண்மைக்கு எடுத்துக்காட்டு தான்எம்ஜிஆரின் வாழ்க்கை. எம்ஜிஆர் பிறந்தார் அதிமுக இயக்கம் பிறந்தது.ஏழை மக்களின் வாழ்வில் ஒளி பிறந்தது.

எம்ஜிஆர் பிறந்தார் ஆதிக்கவாதிகளை எதிர்க்கும் வீரம் பிறந்தது. தை மாதத்தில் எம்ஜிஆர் பிறந்ததால் மக்களின் வாழ்வில் வழிபிறந்தது.

பேரறிஞர் அண்ணா புரட்சித் தலைவரை பற்றி கூறும் போது, எம்ஜிஆர் புகழ் நாம் பெற்ற புகழாகும். நாம் பெற்ற புகழ்நாட்டுக்குச் சொந்தம். நம் ஒவ்வொருவருக்கும் அவர் புகழிலே பங்கு உண்டு. நாட்டின் தலைசிறந்த மகனாக அவரைக்கருதுகிறோம் என்று கூறினார்.

கழகத்தை கட்டிக் காத்து கழக ஆட்சி அமைத்து கழகத்தின் மூலம் தமிழகத்தை காக்கின்ற பொறுப்பு எளிதானது அன்று. ஆனால்அந்தப் பணிகளை நாம் சிறப்பாக நிறைவேற்றி அந்தப் பணி தரும் வெற்றிக் கனிகளை எம்ஜிஆருக்கே சமர்ப்பித்தும் வருகிறோம்.

எம்ஜிஆருக்கு யார் எதிரிகளோ, அவர்களே நமக்கும் எதிரிகள். எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில் அதிமுக இயக்கத்தை நடிகர் கட்சிஎன்று நா க்கூசாமல் அழைத்தவர்கள், பல துன்பங்களை ஏற்படுத்தியவர்கள் யாரோ, அவர்களே இன்றும் நமக்கு தடைகளைஏற்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் அதிமுக அண்டத்தின் பெரு நெருப்பு, அணைக்க முடியாத ஊழித் தீ. அதனால் தான் இன்று ஒப்பில்லா இயக்கமாகவளர்ந்து நிற்கிறது. பெண் தானே என்று என்னை ஏளனமாக நினைத்த பெரியவர்கள் இன்று சட்டசபைக்குள்ளும் எட்டிப் பாராமல்மூலையிலே உட்கார்ந்து விட்டார்கள்.

பொறாமையே குணாதிசயமாக கொண்ட ஒரு பெரிய மனிதர்-நாளும் நமக்குத் தொல்லை கொடுப்பதையே தொழிலாககொண்டவரை கவியரசு கண்ணதாசன் ஒரு கவிதையிலே,

ஊர்ப்பணத்தில் ஆசை,

உன் வீட்டில் பொருள் சேர்த்தல்,

யார் காலைப் பிடித்தேணும்

அரசுரிமை பெற நினைத்தல்

பேருக்கும் பொருளுக்கும்

பேயாய் அலைந்து வரல்

சீரழிந்த வாழ்வுக்குச்

செந்தமிழால் பெருகிடுதல்

என்று பாடியுள்ளார். கால ஓட்டத்தில் எப்படிப்பட்ட தீயவரும் கொஞ்சத் நல்லவராக மாறுவார்கள். ஆனால் ஐம்பதிலும்,எண்பதிலும் ஒரே மாதிரி தீயவராக இருக்க ஒரு சிலரால் தான் முடியும்.

அன்று திமுக அரசால் காலியாக்கப்பட்ட கஜானாவை வைத்துக் கொண்டு ஆட்சியைத் தொடங்கிய நாம் இன்று எத்தனைசாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். ஆனாலும் சில அரசியல் அரை வேக்காடுகள் ஒன்றுமே தமிழகத்தில் நடைபெறவில்லை என்றுஒப்பாரி வைத்துக் கொண்டு தான் உள்ளன.

இந்தப் பொய்யர்களின் முகமூடிகளை கிழித்து அவர்களது உண்மை முகத்தை ஊருக்குக் காட்டுவதற்கு உங்கள் உழைப்பும்ஒத்துழைப்பும் மிகத் தேவை. எனவே நமது ஒட்டு மொத்த கவனமும் வெற்றியிலே இருக்கட்டும். வரும் தேர்தலிலும் நம் வெற்றிஉறுதி.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+