புதுவை: பழைய தொகுதிகளின் அடிப்படையிலேயே தேர்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் தற்போதைய தொகுதிகளின் அடிப்படையிலேயே சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் எனதலைமைத் தேர்தல் ஆணையர் டாண்டன் தெரிவித்துள்ளார்.
புதுவை வந்துள்ள டாண்டன் அங்கு மாநில தேர்தல் அதிகாரி, காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்துஆலோசனை நடத்தினார்.பின்னர் அவரை புதுவை அரசியல் கட்சித் தலைவர்களும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம்டாண்டன் பேசுகையில், தொகுதி சீரமைப்பு அடிப்படையில், புதிய தொகுதிகளின் படி தேர்தலை நடத்த வண்டும் என்றுஅரசியல் கட்சித் தலைவர்கள் கோரினர்.
அதே போல தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்படும் அதே நாளில் புதுவையிலும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரினார்கள்.தொகுதிகளைப் பொறுத்தவரை, தற்போதைய தொகுதிகளின் அடிப்படையிலேயே தேர்தலை நடத்த முடியும்.
தொகுதி சீரமைப்புப் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. தமிழகத்துடன் சேர்த்து தேர்தல் நடத்துவது குறித்துஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications