இந்திய துணை ஜனாதிபதிக்கு அறுவை சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
துணை ஜனாதிபதி பைரான் சிங் ஷெகாவத்துக்கு நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சைசெய்யப்பட்டது.
துணை ஜனாதிபதிக்கு சிறுநீரக பையில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவஅறிவியல் ஆராய்ச்சி நிறுவன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் அஷோக் ஹேமல் தலைமையில் மருத்துவர்குழுவினர் ஷெகாவத்துக்கு லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்தனர்.
ஷெகாவத்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இன்னும் இரண்டொரு நாட்களில்மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications